இரண்டு வாரத்திற்குள் இருநூறு தெரு விளக்குகள் பொறுத்தப்படுவதற்கான தீர்மாணம்: ஓட்டமாவடி பி.சபை

0
254

(எஸ்.எம்.எம்.முர்ஷித்) 

ஓட்டமாவடி பிரதேச சபையில் கடந்தகாலங்களில் இடம் பெற்ற வாகன கொள்வனவில் முறைகேடு இடம் பெற்றுள்ளதாகவும் இதனை விசாரனை செய்வற்கு ஏழு பேர் கொண்ட விசாரனை குழு ஒன்று நேற்று மாலை இடம் பெற்ற பிரதேச சபையின் முதலாவது அமர்வில் நியமிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச சபையின் முதலாவது அமர்வு நேற்று மாலை (26.04.2018) சபைத் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் நடைபெற்றது. உப தவிசாளர் ஏ.எல்.அஹமட், சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை செயலாளர் எச்.எம்.எம்.ஹமீம் ஆகியோர் பங்கேற்றனர்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு வாரத்திற்குள் இருநூறு தெரு விளக்குகள் பொறுத்தப்படுவதற்கான தீர்மாணம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டதுடன் பிரதேச சபை எல்லைக்குள் சேதமடைந்துள்ள வீதிகள் புணரமைப்பு செய்யப்படவுள்ளதுடன் வீதிகளுக்கு பெயரிடல் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தீர்மாணிக்கப்பட்டது.

இதே வேளை சபை உறுப்பினர்களில் இருந்து பெறுகை குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன் சபை அமர்வு ஒவ்வொரு மாதமும் நான்காம் வாரம் வியாழக்கிழமை இடம் பெறும் என்றும் தீர்மாணிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here