அதிகாரம் கொண்ட அரசியல் ஓட்டமாவடியில் இருக்கக் கூடாது என்று சில கல்வியலாளர்கள் செயற்படுகின்றார்கள்.

0
254

(எஸ்.எம்.எம்.முர்ஷித்) 

அதிகாரம் கொண்ட அரசியல் ஓட்டமாவடி பிரதேசத்தில் இருக்கக் கூடாது என்று சில கல்வியலாளர்கள் இப்பிரதேசத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள், அவர்களை நினைக்கும் போது கவலையாக இருக்கின்றது என்று கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் சம்பிரதாய பூர்வமான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று வியாழக்கிழமை மாலை சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!

ஓட்டமாவடி பிரதேசத்தில் 90 வீதமான வீதிகள் என்னால் போடப்பட்டுள்ளது. வீதி போடும் போது சொன்னேன் எப்போதாவது குடிநீர் விநியோகத்திற்காக வீதிகள் உடைக்க வேண்டும் என்று. இப்போது இதற்காக வீதிகள் உடைக்கப்பட்டுள்ளது.

வீதிகளை வெட்டி குடிநீர் அதிகார சபை செயற்படுவதானால் பிரதேச சபையுடன் இணைந்து ஒப்பந்தம் மேற்கொண்டு செய்ய வேண்டும். ஆனால் கடந்த காலத்தில் பிரதேச சபை செயலாளர் ஒப்பந்தங்களை செய்யவில்லை.

பிரதேச சபைக்கு சொந்தமான வீதிகள் வெட்டப்படுகின்றது தொடர்பாக சபை நிருவாகத்தினர் யாரும் கரிசனை கொள்ளவில்லை. வீதியை வெட்டுபவர்களே மீள சீர் செய்து தர வேண்டும் என்ற ஒப்பந்தங்களை சபை செய்திருக்க வேண்டும்.

அக்காலத்தில் பிரதேச சபையின் நிருவாகத்தில் இருந்தவர்கள் இந்த விடயத்தில் கண்டுகொள்ளாமையானது இப்பிரதேச மக்களுக்கு செய்த துரோகச் செயலாகவே நாங்கள் கருதுகின்றோம்.

எனவே ஓட்டமாவடி பிரதேச சபைக்கு சொந்தமான வீதிகளுக்கு பெயர் இடப்படல் வேண்டும். அத்தோடு வீடுகளுக்கு இலக்கம் இடப்படல் வேண்டும். இந்த விடயத்தில் எல்லா உறுப்பினர்களும் இணைந்து செயற்பட வேண்டும். எல்லோரும் சேர்ந்து செயற்பட வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு ஆகும் என்றார்.

இதன் போது பிரதேச சபை தவிசாளரினால் பிரதேச சபையின் தேவைகள் அடங்கிய மகஜர் பிரதி அமைச்சரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரி.அஸ்மி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம், பிரதேச சபை செயலாளர் எச்.எம்.எம்.ஹமீம், சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டதுடன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here