இரணைதீவு மக்களுக்கு உலர்உணவுப் பொருட்கள் வழங்கிய சுரேஸ் குழு

0
242

(பாறுக் ஷிஹான்)

இரணைதீவில் போராட்டம் நடாத்திக்கொண்டிருக்கும் மக்களுக்கு ஒரு தொகுதி உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
நேற்று(26) ஒரு லட்சத்திபத்தாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் இரணைதீவுக்குச்சென்று போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சந்தித்து அவர்களின் தேவைகள் குறித்தும் தற்போதைய நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடி மக்குளுக்கு தேவையான ஒருதொகுதி உலர் உணவுப்பொருட்களை கையளித்தார்.

புலம்பெயர் ஆதரவாளர்களின் நிதிப்பங்களிப்புடன் இரணைதீவு மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனுடன் அவரது கட்சியைச் சேந்த பிரதேசசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here