முஸ்லிம்கள் இஸ்லாம் தொடர்பான கல்வியில் பூரணத்துவம் அடைந்திருப்பதாக அதீத பிரமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

0
175

முஸ்லிம்கள் நாம் இஸ்லாம் தொடர்பான கல்வியில் பூரணத்துவம் அடைந்திருப்பதாக அதீத பிரமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நாளாந்தம் பாடசாலை உபன்யாசங்கள், நாளாந்த வாராந்த பள்ளிவாசல் விஷேட மார்க்க சொற்பொழிவுகள், வானொலி முஸ்லீம் நிகழ்ச்சிகள், வெள்ளி மேடைகளான குத்பாக்கள், புஹாரி மஜ்லிஸுகள், நோன்பு கால விஷேட மார்க்க சொற்பொழிவுகள், திருமண, ஜனாஸா சொற்பொழிவுகள் என இஸ்லாத்தை செவிமடுக்கின்ற சந்தர்ப்பம் பல இருக்கின்றபோது காதியா வகுப்புக்கள் தேவையற்ற ஒன்று என்ற மனப்பதிவு பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஆனால் உண்மையிலாயவினை மேற்கொள்கின்றபோது மாணவர், மற்றும் இளைஜர் சமூகத்தில் ஏற்பட்டுள்ள கலாச்சார பிறழ்வுகள், போதைப்பொருள் பாவனையின் தாக்கம், ஒழுக்க வீழ்ச்சி, என்பன வரை பார்க்கும்போது எமது அதீத கற்பனை பிழையானது என எண்ணத்தோன்றுகின்றது. பிரபல முஸ்லீம் பாடசாலையில் கல்விகற்று பரீட்சைக்கு தோற்றிய தமிழ் மாணவி இஸ்லாம் பாடத்தை விருப்புத்தேர்வாக எழுதி சித்தி எய்திய நிலையில் சக முஸ்லீம் மாணவி வெறுமனே 24 புள்ளிகள் பெற்று தோல்வியடைந்துள்ளமை எமது மார்க்க கல்வி தொடர்பான மீளாய்வினை வேண்டி நிற்கின்றது. எனவே காதியா போன்ற முறைசார் கல்வி நடவடிக்கை ஒன்றே எமது அடுத்த சந்ததியையாவது சிறந்த முன்மாதிரி சமூகமாக மாற்றும்’ என முஸ்லீம் சமய கலாச்சார திணைக்கள பிராந்திய பொறுப்பதிகாரி ஜுனைட் நளீமி பூநொச்சிமுனை காய்தியா பாடசாலையின் 27வது வருட நிறைவையொற்றி நடாத்தப்பட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார்.
காதியா பாடசாலையின் அதிபர் ரசூல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட காதியா சம்மேளன செயலாளர் அஷ்ஷெய்ஹ் பாயிஸ் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் அஹதியா பாடசாலையின் நிறுவனர் செய்யித் அஹமத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இறுதி நிகழ்வாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அஹதியா பாடசாலையின் நிறுவனர் செய்யித் அஹமத் மற்றும் ஜுனைட் நளீமி ஆகியோருக்கு அவர்களது சேவைகளை பாராட்டி பொன்னாடி பொத்தி கெளரவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here