வாகனேரி குளத்தில் முள்ளிவட்டவான் மக்கள் மீன் பிடிப்பதற்கான பிரச்சனை என்ன… களத்தில் கணக்கறிஞர் றியால்..

0
387

(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்)

மட்டக்களப்பு மாவட்டம் – கல்குடா தொகுதி, ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் கிரான் பிரதேச செயலக சபை நிருவாக எல்லைக்குள் காணப்படும் மிக முக்கியமான குளமான வாகனேரி குளத்தில் காலா காலமாக தமது வாழ்வாதரத்தினை நிவர்த்தி செய்யும் பொருட்டு நன் நீர் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த முள்ளிவட்டவான் பிரதேச மக்களின் மீன் பிடி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு சுமூகமான தீர்வினை பெற்றுக்கொடுக்கும் பொருட்டு கடந்த பாராளுமன்ற வேட்பாளரும், கல்குடா தொகுதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அமைப்பாளரும், கணக்கறிஞருமான றியால் ஞாயிற்றுக்கிழமை 29.04.2018 குறித்த பிரதேசத்திற்கு சென்று நேரடியாக சகல மக்களையும் சந்தித்து பிரச்சனைக்கான காரணங்களை தெரிந்து கொண்டார்.

மேலும் முள்ளிவட்டவான் பிரதேசத்தில் தமிழ் சகோதரர்களும், முஸ்லிம்களும் சேர்ந்து தமது வாழ்வாரத்திற்காக வாகனேரி குளத்தில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் இரண்டு கிராமங்களுக்கும் இடையிலான பிரச்சனையாக குறித்த பிரச்சனையானது தற்பொழுது மாற்றமடைந்துள்ளது. வாகனேரி பிரதேசத்து மக்கள் மாத்திரமே குறித்த குளத்தில் மீன் பிடிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அரசாங்க உத்தியோகத்தர்கள் தெரிவிப்பதாக முள்ளிவட்டவான் மக்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு அமைவாக நாங்கள் இந்த பிரச்சனையானது எவருக்கும் பாதிப்பு வராத வகையில் சுமூகமாக அரசாங்க அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தீர்த்து வைப்பதற்கு என்னால் முடியுமான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என தெரிவித்தார்.

அத்தோடு மீன் பிடி தொழில் ஈடுப்பட்ட முள்ளிவட்டவான் மீன் பிடி தொழிலார்கள் சட்டத்திற்கு முரணான வகையில் தொழிலில் ஈடுபட்டதாக கருதி உபகர்ணங்களை பொலிசார் கைப்பற்றி அவைகள் நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு வழக்கும் தாக்கள் செய்யப்பட்டுள்ளதினால் சட்டரீதியாக சகல ஆலோசனைகளையும் பெற்று அதற்கான சட்டரீதியான தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு சகலவிதமான சட்ட ஆலோசனைகளையும், அதற்கான முன்னெடுப்புக்களையும் தான் செய்து தருவதாகவும் கணக்கறிஞர் றியால் முள்ளிவட்டவான் மீன் பிடி தொழிலாளர்களிடம் வாக்குறுதி அளித்தார்.

அத்தோடு முள்ளிவட்டவான் பிரதேசத்தில் வருமை கோடிற்கு கீழ் வாழுகின்ற பெண்கள் விடுத்த வாழ்வாதராம் சம்பந்தமான கோரிக்கைகளை செவிமடுத்த கணக்கறிஞர் றியால் அதற்கான தீர்வினை தான் பிரதி நிதித்துவப்படுத்தும் கட்சியின் அரசியல் தலைமைகளோடு கலந்தாலோசித்து அதற்காக முடியுமான தீர்வினை மிக விரைவில் பெற்றுத்தருவதாகவும் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here