ஓட்டமாவடியி்ல் தினக்குரல் இனி விற்கப்போவதில்லை – ஓட்டமாவடி முகவர்

0
454

(அபூ இன்ஷிபா)

ஊடக தா்மத்தை பேணுவதாக சொல்லிக்கொண்டு ஊளையிடும் தமிழ் ஊடகங்கள் முஸ்லிம் இனத்துக்கெதிராக செயற்படுவதிலேயே கண்ணுங்கருத்துமாய் உள்ளார்கள்.

திருகோணமலையில் முஸ்லிம்களின் அபாயா ஆடைக்கெதிரான கண்டன ஆா்ப்பாட்டத்தை திசைதிருப்பி “கிழக்கில் தலைதூக்கும் முஸ்லிம் இனவாதம்” என்ற தலைப்புச்செய்தியுடன்
(28.04.2018 சனிக்கிழமை) தினக்குரல் பத்திரிகை வெளியானது. அதனையடுத்து முகப்புத்தங்களில் அப்பத்திரிகைக்கெதிரான கோஷத்தையடுத்து ஓட்டமாவடி பத்திரிகை முகவா் அமீர் டெயிலரிடம் கேட்டுக்கொண்டதற்கினங்க நடுநிலையில்லாத முஸ்லிம்களுக்கெதிராக செய்திகளை வெளியிடுகின்ற தினக்குரல் பத்திரிகையினை இனி தான் விற்பனை செய்யப்போவதில்லை என தெரிவித்தார்.

இருந்த போதும் தினக்குரல் பிரதம ஆசிரியரை அவர் தொடர்பு கொண்டு வினவியபோது அது யாழ் தினக்குரல் பத்திரிகை அது எங்களுக்கு தொடர்பில்லை என பிரதம ஆசிரியர் கூறியதாகவும் எவ்வாறெனினும் இனிமேல் தினக்குரல் பத்திரிகையை எனது கடைக்கு அனுப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here