வாழைச்சேனை பொலிஸாரின் ஏற்பாட்டில் பயணிகளுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

0
240

(ஓட்டமாவடி நிருபர் அ.ச.மு.சதீக்)

இன்று வெசாக் தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டீ.எஸ் பெரமுன அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு 29.04.2018 ம் திகதி வாழைச்சேனை பொலிஸ் நிலையம் முன்பாக நடைபெற்றது.

இதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தம்மிக தயானந்த மற்றும் பெண்கள் சிறுவர் பிரிவின் பொறுப்பதிகாரி பத்மலதா, நிர்வாக பொறுப்பதிகாரி எல்.ரி பண்டார ஆகியோர் உணவுப் பொதிகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.

இதில் சுமார் 3000 பகல் உணவு பொதிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இவ் நிகழ்வை காரளசிங்கம் சகாதேவா, கோறளைப்பற்று கிராம சேவையாளர்கள், எரிபொருள் நிலைய குட்டி ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இவ்வெசாக் வைபவம் இனநல்லிணக்க உறவு பாலமாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here