பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

0
307

பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் ​கொள்ள உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

இன்று காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி முன்னிலையில் இவர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.

இதற்காக பதவியேற்க உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

தேசிய அரசாங்கத்தின் நான்காவது அமைச்சரவை திருத்தத்தின் படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 18 பேர் புதிதாக நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

நேற்று பதவியேற்றுக் கொண்டவர்கள் தவிர ஏனைய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகள் ஏற்கனவே இருப்பது போன்றே செயற்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

Ad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here