கண்டி திகன சம்பவம் தொடர்பில் கைதான அமித் உட்பட 27 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு.!

0
331

கண்டி திகன பகுதியில் கடந்த மாதம் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அமித் வீரசிங்க உள்ளிட்ட 27 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கண்டி திகன பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட அமித் வீரசிங்க உள்ளிட்ட 27 பேரின் விளக்கமறியலை தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடித்துள்ளது.

சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

Vk

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here