மட்டக்களப்பு மாவட்ட புதிய அமைச்சர்களுக்கு கல்குடா நேசன் வாழ்த்துகின்றது

0
249

மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று முஸ்லிம் பிரதிநிதிகள் பாராளுமன்ற புதிய அமைச்சரவை மாற்றத்தின் போது பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்று மாவட்டத்துக்கும் தேசத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களும்

கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சராக எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்களும்

தேசிய சகவாழ்வு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சராக அலிசாஹிர் மௌலானாவும் நேற்று ஜனாதிபதி முன்னிலையில் தங்களுடைய அமைச்சுக்களை பொருப்பேற்றனர்.

ஆகவே தெரிவு செய்யப்பட்ட மூன்று அமைச்சர்களுக்கும் கல்குடா நேசன் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது.

புதிய அமைச்சின் ஊடாக இத் தேசத்தின் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மூவறும் இணைந்து செயலாற்றுவதன் மூலம் நாட்டின் நிலையான அபிவிருத்திக்கு மகத்தான சேவையாற்ற வேண்டும் எனவும் கல்குடா நேசன் இணையத்தளம் பிரார்திக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here