முஸ்லீம்கள் சிந்தனையை கூராக்கும் நேரம்

0
264

சாத்தான்களின் சதுரங்க ஆட்டத்தால் முஸ்லீம் சமூகம் பழியாக்கப்பட்டாலும், திருகோணமலை மாவட்ட முஸ்லீம்கள் ஏமாற்றப்பட முடியாது.

நமது மாவட்ட அரசியலும், நாட்டின் தேசிய அரசியலும் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டது. நாம் தற்போது விழிப்பூட்டப்பட்டுள்ளோம். நமக்கான தெளிவும் சிந்தனை மாற்றமும் நமது தலமைகளின் துரோகங்களாலும், பிற்போக்கு செயற்பாடுகளாலும் படிப்பினையாக்கப்பட்டுள்ளது.

கௌரவ நஜீபுக்கு அமைச்சர், முதலமைச்சர் என்று பதவிகளை வழங்கி திருகோணமலை மாவட்டத்தையும், கிண்ணியாவையும் கௌரவித்த, ‘மஹிந்தவை சந்திரிக்காவை நெருடலாக ஞபகமூட்டிய இன்றைய அமைச்சரவை மாற்றம்.

காரணம் நஜீப் கட்சிக்கு விசுவாசமாகவும், கட்சி இவர்மீது விசுவாசமாகவும் இருந்தது.ஆனால் தற்போதைய பிரதிநிதிகள் ஏதோ ஒருவிதத்தில் தங்கள் தலமைகளுக்கு அடிபணிய கடமைப்பட்டுள்ளனர்.இதனால் கிடைத்ததை தக்க வைத்துக் கொள்வதைவிட மாற்று வழியில்லை.

உண்மையில் தங்களது கட்சியுடன் முரண்பட்டால்…அடுத்த முறை தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்குமா??

இன்னொருவன் கட்சிக்குள் தலைதூக்காமல்!
தலமைகளுடன் நேரடியாக தொடர்புகொள்ள முடியாமல்!
உள்ளூராட்சித் தேர்தலுக்கு அடுத்த கட்டம் எவரையும் போகாமல் அடக்குவது!
தலமைகளின் தவறுகளுக்கும் தலையாட்டுவது!

இந்த நிலை மாறவேண்டும்.இதற்கான மனநிலைப் பாங்கு மக்களிடம் வரவேண்டும்.ஏனெனில் 3பிரதிநிதிகள் என்ற பாரிய எதிர்பார்ப்பு சமூகத்தில் சண்டையிலும், சிறுபிள்ளைத்தன அதிகார போட்டியையுமே தோற்றுவித்துள்ளது.

உண்மையில் அபிவிருத்திக்கான செயற்பாட்டுக்கு அமைச்சுப் பதவியோ, ஆளும்கட்சி இலட்சனையோ அவசிய தேவைப்பாடு அல்ல..இருந்தும் நாம் தனித்தனி கோத்திரங்களாக பிரிந்து நிற்பதால் சகலரது பார்வையிலும் தூரமாகிவிட்டோம்.

நம்மைத் திரும்பிப் பார்க்கவும், நாம் திருப்பி அடிக்கவும தயாராக வேண்டும்.

ஆகவே எவரையும் குறைகூறவோ, கிண்டலடிக்கவோ வேண்டிய அவசியமில்லை.ஒப்பீட்டளவில் SLMC ஓரளவு சாதகமாக நடந்துள்ளது. என்றாலும் மூதூரை வைத்து கட்சியை எவரையாவது வைத்து படம் ஓட்டும் மனப்பாங்கு தெளிவாக உள்ளது.

இந்த நாட்டின் சகல அரசியல் கட்சிகளிலும் சொந்தக்காரனாக நாம் உள்ளோம்.

1-
மர்ஹூம் அலி, அபூபக்கர் என்று இலங்கையில் தேர்தல் தொடங்கியது முதல் பிரதிநிதிகளை கண் மண் கிண்ணியா

2-
SLFPல் ஆளுமைமிக்கவராகவும் பிரதிஅமைச்சராகவும் கிழக்கில் தனித்துவம் படைத்த மர்ஹூம் மஜீது நமது மண்.

3-
UNPல் 30 வருடத்திற்கு மேலாக கிழக்கில் வெற்றி பெற்றதோடு, அமைச்சராக தனித்து சரித்திரம் படைத்த மர்ஹூம் மக்ரூப் நமது மண்.

4-
மாகாணசபை உறுப்பினராக, அமைச்சராக, முதலமைச்சராக SLFPல் தேர்தலில் கிழக்கில் வெற்றிபெற்ற முஸ்லீம் என்ற பெருமைக்குரிய நஜீப் நமது மண்.

5-
வடகிழக்கில் திருகோணமலை மாவட்டத்தில் மட்டும் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்ட கௌரவ இம்ரான் நமது மண்.

6-

SLMC கட்சிக்கு முதல் தேர்தலான 1988 வடகிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அதிகூடிய வாக்கான 24006 வாக்குகளைப் வழங்கி சரித்திரம் படைத்த மூதூர் தொகுதியில் நமது மண் அதிக பங்காளி.

7-
றிசாத், அமீரலி, ஹுஸைன்வைலா போன்றவர்களுடன் SLMCஇலிருந்து பிரிந்த போது, ACMC கட்சி உருவாக்கத்தில் முக்கிய பங்குவகித்த நஜீப் நமது மண்.

8-
SLMC கட்சிக்காக உயிர்நீத்த ஒரேஒரு வேட்பாளர் மர்ஹூம் வைத்துள்ளா நமது மண்.

9-
ACMCகு ஒரு மாகணசபை கூட இல்லாத போது 30ஆயிரத்துக்கு மேல் வாக்குகளை வழங்கிய பாராளுமன்ற பிரதிநிதியாக கௌரவ மக்ரூபை வழங்கியது நமது மண்.

10-
1989 தேர்தலில் 11000 வாக்குகளுடன் இருந்த SLMCஜ 26000கு உயர்த்தியதோடு, முதலாவது மக்கள் பிரதிநிதியாக வெற்றி பெறச் செய்த கௌரவ தௌபீக் நமது மண்..

11-
கிழக்கு மாகாணத்தில் ஒரேஒரு நகரபிதாவை ACMC கட்சிக்கு வழங்கிய பெறுமைக்குரிய கௌரவ ஹில்மி நமது மண்.

12-
அரசியல் அதிகாரமோ, அபிவிருத்தியோ செய்யாது புதிதாக உருவான அதாவுள்ளாவின் மக்கள் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அதிகப்படி வாக்குகளால் வெற்றிபெச் செய்த கௌரவ பாயிஸ் நமது மண்.

13-
இதுதவிர மர்ஹூம் மஜீதின் முஸ்லீம்களுக்கான தனித்துவம் தொடர்பான தூரநோக்கும் செயற்பாடுமை மர்ஹூம் அஷ்ரபை தனிக்கட்சி ஆரம்பிக்க தூண்டியது.

இவ்வாறு தேசிய மற்றும் சிறுபான்மை கட்சிகளின் வளர்ச்சியிலும், உருவாக்கத்திலும் பங்காளர்களாகவும் பாதுகாவலராகவும் உள்ளது நமது மண்.

நமது அரசியல் பல கோணங்களில் இடமாறினாலும், நமது மண்ணும் மக்களும் அரசியல் கலாச்சாரத்திற்கு வரலாற்றுச் சொந்தக்காரர்கள்.

நமக்குள் முரண்பாடுகளும், கருத்து மோதல்களும் தொடர்வதற்கு நமக்கிடயை சங்கிலித் தொடராக இணைந்துள்ள கட்சி அரசியலே காரணமாகும்.

நாம் தலைவர்களை உருவாக்கியவர்கள்..கட்சிகளை அறிமுகம் செய்து சமூகமயமாக்கியவர்கள்.நமக்கும் அரசியலுக்கும் இடையிலான தொடர்பு மரணிக்கும்வரை சரித்திரமே.

தேர்தல் கேட்பது மட்டும் அரசியல் அல்ல.அரசியல் விழிப்புணர்வு, பங்களிப்பு, பங்குபற்றல, ஆலோசனை மற்றும் செயற்பாடுகள் என பலவடிவங்களில் உருப்பெற்றது.

ஆகவே நமக்கு இயலுமானவரை நமது பங்களிப்பைச் செய்வோம். ஆகவே செயற்பாட்டு அரசியலுக்கு முன்னரான சமூக மாற்றத்துடனான அரசியல் முக்கியம். வரலாற்றில் நீண்டகாலம் தொடர்ந்த அரசியல்கள் மக்கள் செயற்பாடுகள் கொண்டவை. ஆகவே மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வேளைத் திட்டத்தை முன்னெடுப்போம்.

சரித்திரத்தைப் படைத்தநாம்..சரித்திரத்தில் பங்காளர்கள் அல்ல!நம்மை தூரமாக்கிக் கொண்டோம்.துரியோதனனும் துஸ்டனும் நமக்கு இடையில் புகுந்து கொண்டான்.

நாம் குனிந்து நிற்கிறோம்.இன்னும் வீழவில்லை.வீழவும் மாட்டோம்.வீரத்திற்கும் வரலாற்றிற்கும் சொந்தக்காரர்கள் நாம்.திருப்பி அடிப்போம்.சிந்தனையை சுயமாகவும், சுதந்திரமாகவும் சுவாசிக்க விடு இளைஞனே.மாற்றமும் நாமே.மாறுவதும் நாமே.

ஆகவே நாம் உருவாக்கிய தலைவர்களை நாம் வழிநடாத்த வேண்டாமா?

நாம் வளர்த்துவிட்டத போதும், நமக்காக கட்சி பிரசவிக்க வேண்டாமா?

நம்மை நாமே ஆழக்கூடாதா?

நமக்கு என்ற குறைபாடு உள்ளது?அரசியலில் நாம் தனனிறைவு கண்டது போதாதா?

நாம் வளர்த்துவிட்ட கிடா நமக்கு மூக்கணை போடலாலா?

நாம் அரசியலில் குனிந்து வாழ்ந்ததும், கொடைவல்லலாக இருந்ததும் போதாதா?

நமது எதிர்கால சந்ததியினருக்கு பதில்கூறாமல் சாதித்ததன் பயன் என்ன?

ஒன்றுபடுவோம்.நாமும் நமது தலைவர்களும்.

நமது மண்!நமது மக்கள்!நமக்கான புதிய பயணத்தில் முற்போக்கு சக்திகளை பலப்படுத்துவோம்.

Fahmy Mohideen

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here