ஓட்டமாவடி – காவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி

0
444

(அபூ அனூஸ்)

ஜம்ஐய்யது தஃவதில் இஸ்லாமிய்யா-கல்குடா வின் கிளை நிறுவனமான ஓட்டமாவடி- காவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலையின் இரண்டாவது இல்ல விளையாட்டுப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் (02.05.2018) புதன்கிழமை பி.ப.3.30 மணியாளவில் ஆரம்பமானது.

இப்படசாலையில் கல்வி கற்கும் விஷேட தேவையுடைய மாணவர்கள் விளையாட்டு நிகழ்வுகளில் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறப்பாக செயற்பட்டத்துடன் உடற்பயிற்சி கண்காட்சி ஒன்றினையும் வழங்கியமை சிறப்பம்சமாகும்.

இப்பாடசாலையின் முகாமையாளர் ஏ.எல்.நெய்னா முகம்மது (ஓய்வு பெற்ற அதிபர்) அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் திருமதி நிஹார மௌஜூத் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வில் பெற்றோர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here