முதலீட்டார்கள் இலங்கை வருவது திருட கற்றுக்கொள்வதற்காகவே – ரோஹித்த அபேகுணவர்தன

0
248

எதிர்காலத்தில் இலங்கைக்கு முதலீட்டார்கள் வருகை தருவது திருட கற்றுக்கொள்வதற்காகவே அன்றி முதலீடு செய்வதற்காக அல்ல என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விஞ்ஞான ரீதியான அமைச்சரவை அமைக்கப்பட்டு 4 மாதங்கள் என்றும் விஞ்ஞான ரீதியில் அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது சரத் பொன்சேகாவிற்கு மட்டுமே என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் ரூபாயின் பெறுமதி வீழ்சியடைந்து மக்கள் நிர்கதியற்று இருப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களுக்கு இடையில் எவ்விதத்திலும் ஒற்றுமையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here