எழுத்தாளர் ஓட்டமாவடி அறபாத்தின் நூல் அறிமுகமும் கலந்துரையாடலும்

0
317

(எச்.எம்.எம்.பர்ஸான்)

எழுத்துலகில் புகழ்பெற்ற பிரபல எழுத்தாளர் ஓட்டமாவடி அறபாத்தின் நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் நூல் அறிமுகமும் கலந்துரையாடலும் ஏறாவூர் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் EEDI கல்வி நிறுவனத்தில் நேற்று மாலை (5)ம் திகதி சனிக்கிழமை வாசக வட்டத்தின் தலைவர் முகம்மட்  ஸப்ரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலை இலக்கிய செயற்பாட்டாளர் எம்.ஸப்ரி தலைமையுரையும், வரவேற்புரையும் நிகழ்த்தியதோடு. அறபாத்தின் எழுத்துலகம் பற்றிய அறிமுகத்தை மூத்த எழுத்தாளரும் மக்கத்துச் சால்வை புகழுமாகிய முன்னாள் வட- கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  எஸ்.எல்.எம்.ஹனீபா நிகழ்த்தினார். அத்தோடு நூல் விமர்சனத்தை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் த.மலர் செல்வனும் . அரபாத்தின் கதைகள் பற்றி எழுத்தாளர் பாலைநகர் ஜிப்ரி ஹஸனும் உரைகளை நிகழ்த்தினர்.

வாசகர் வட்டத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வின் இறுதி நிகழ்வாக அறபாத் ஏற்புரையுடன் நூல் அறிமுகம் நிறைவுபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here