ஓட்டமாவடி, மாவடிச்சேனை வா்த்தகா்கள் ஒன்றுபடுவார்களா?

0
187

(அபூ இன்ஷிபா)

ஓட்டமாவடி வா்த்தக சங்கம் ஒன்று இருக்க, இன்னுமொரு வா்த்தக சங்கமாக மாவடிச்சேனை பிரதான வீதியிலுள்ள அனைத்து வியாபார ஸ்தலங்களை கொண்ட ஒரு வா்த்தக சங்கமாக கோறளைப்பற்று மத்தி வா்த்தக சங்கம் என்ற பெயருடன் புதிதாக ஒரு வா்த்தக சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி பிரதான வீதியை விட வியாபாரம் கூடிய வீதியாக MPCS வீதி காணப்படுகிறது இருந்தபோது எந்தவொரு வா்த்தக சங்கத்தன் கீழும் இவ்வீதியிலுள்ள வியாபார ஸ்தலங்கள் உள்வாங்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

சிறியதொரு வா்த்தக வட்டத்தை கொண்ட நமக்குள்ள இரு வா்த்தக சங்கங்கள் ஒரு சங்கம் இயக்கமில்லாமல் கிடக்க இன்னனுமொரு வா்த்தக உதயமாகியிருக்கி்றமை கவனிக்கத்தக்கது.

சங்கங்களின் உயிரோட்டமே எமது பிரதேசத்தின் அபிவிருத்தி மற்று சமூக கட்டமைப்பு தங்கியிருக்கிறது. இருந்தபோதிலும் நமக்குள் உள்ள ஒற்றுமையின்மையே எல்லா விடயங்களிலும் தோல்வியை சந்திக்க நேரிடுகிறது. பிரதேச வர்த்தக முன்னோடிகள் இந்த விடயத்தில் கவனம் எடுப்பார்களா?

நாளைய மே 7 தொழிலாளா் தினத்தை முன்னிட்டு கடைகளை மூடும்படி ஓட்டமாவடி வா்த்தக சங்கம் ஒரு அறிவித்தலையும் கோறளைப்பற்று மத்தி வா்த்தக சங்கம் என்ற பெயரில் மாவடிச்சேனை கடை உரிமையாளா்கள் இன்னுமொரு அறிவித்தலை அறிவிப்பது நகைப்புக்குரியதே!

ஒற்றை வீதியில் கடைகள் அனைத்தையும் உள்ளடக்கிய எமது முஸ்லிம் பிரதேச வியாபாரிகள் ஒரு வலுவான வா்த்தக சங்கத்தினை கட்டியெழுப்புவார்களா?

பிரதேச வியாபார முன்னோடிகளே இது உங்களின் கவனத்திற்கு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here