நுஜாவின் மே தின விழா அட்டாளைச்சேனையில்

0
213

(பைசல் இஸ்மாயில்)

தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் (நுஜா) இம்முறை ஏற்பாடு செய்துள்ள மே தின விழா நாளை (2018 -05 – 07) திங்கட் கிழமை 9.00 மணிக்கு அட்டாளைச்சேனையில் இடம்பெறவுள்ளதாக ஒன்றியத்தின் செயலாளர் பைஷல் இஸ்மாயில் தெரிவித்தார்.

நுஜா அமைப்பின் தலைவரும் ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த மே தின விழாவில் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து ஊடகவியலாளர்களும் பங்கேற்கவுள்ளதாகவும் கூறினார்.

நாளை காலை அட்டாளைச்சேனை பிரதேச பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆரம்பமாகும் இந்த மே தின ஊர்வலம் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் பேரணியாக அட்டாளைச்சேனை பல நோக்கு கூட்டுறவுச் சங்க கூட்ட மண்டபத்தை சென்றடைந்ததும் இந்த மே தினக் கூட்டம் காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் மே தினக் கூட்டம் “ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றி கொள்வோம்”; எனும் தொனிப் பொருளில் கொண்டாடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த மே தின ஊர்வலம் மற்றும் கூட்டத்தில் ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், சமுக மட்டத் தலைவர்கள், பொது நிறுவனங்களின் தலைவர்கள் என பலரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதில் மூத்த மூத்த இலக்கியவாதியும், கவிஞரும், எழுத்தாளருமான ஆசுகவி அன்புடீன் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டிக் கௌரவிக்கப்படவுள்ளாதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் மூத்த இலக்கியப் படைப்பாளியான ஆசுகவி அன்புடீன் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளதுடன் தேசிய ரீதியில் பல விருதுகளையும் பெற்று தனது பிராந்தியத்திற்கு பெருமையை பெற்றுக்கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here