அமைச்சர் றிஷாட்யினால் கஹட்டகஸ்திகிலியவில் தையல் பயிற்சி நிலையம் திறந்துவைப்பு

0
350

(அஸீம் கிலாப்தீன்)

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவரும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹ்மானின் வேண்டுகோளின் பேரில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகளுக்கான நிறுவனத்தின் (SLITA) ஊடாக அனுராதபுரம் கஹட்டகஸ்திகிலியவில் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலையமொன்றை நிலையத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிஷாட் பதியுதீன் நேற்றைய தினம் (5) திறந்து வைத்து . தையல் பயிற்சி நிலைய ஆசியருக்கான நியமனக்கடிதத்தியும் வழங்கி வைத்தார்

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், கல்னேவ அ.இ.ம.கா பிரதேச சபை உறுப்பினர் ஹிஜாஸ், இப்பலோககம அ.இ.ம.கா பிரதேச சபை உறுப்பினர் நளீம் அனுராதபுர மாவட்ட அமைப்பாளர் அமானுல்லாஹ் ஆசிரியர் இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகளுக்கான நிறுவனத்தின் உத்தியோகத்தர் மற்றும் சஹீட் ஆசிரியர் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here