திருகோணமலையில் 4 வீடமைப்புக் கிராமங்கள் மக்களிடம் கையளிப்பு.

0
270

(அஷ்ரப் ஏ சமத்)

அமைச்சா் சஜித் பிரேமதசாவின் என்னக்கருவில் நாடு முழுவதிலும் உதாகம வீடமைப்புக் கிராமங்கள் நிறுவும் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் 4 வீடமைப்புக் கிராமங்கள் கடந்த வாரம் 5ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டன.

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசாவின் எழுச்சிக் கிராம வேலைத்திட்டத்தின் கீழ் உருவான செமட்ட செவண தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் நோக்கமானது
இல்லாதவா்கள் இயலாதவா்கள் என்பதையும் வசதிபடைத்தவா்கள் என்பதையும் பறைசாற்றக் கூடிய சமூக இலட்சனையாக காணப்படுவது ” வீடாகும்” ஏழைகளுக்கு குடிசையும் பொருளாதார பலம் படைத்தவா்களுக்கு நிலையான ஒரு வீடும் என்பது சமுகம் ஏற்றுக் கொண்ட ஒரு விடயமாக உள்ளது. ஏழை மக்களுக்கு ஒரு வீட்டினை உரிமையினை வழங்குவதன் மூலம் அவா்களை சமுகத்தினால் ஏற்றுக் கொள்ப்பட்ட சமுகத்தின் ஒரு பகுதியினராக மாற்றுவதுடன் உள்ளவா்களுக்கும் இல்லாதவா்களுக்ககுமிடையிலான இடைவெளியினை குறைப்பது மேயாகும்.

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச சுமாா் 03 வருட காலத்தினுள் நாடு பூராவும் நிர்மாணிக்கப்பட்டு வரும் 700 மேற்பட்ட மாதிரிக் கிராமங்களில் வீடு கொள்வோா்கள் இந்த சமுகப்பணியில் ஈடுபட்டுள்ளனா். அவா்களுக்கு தேவையான உதவி ஒத்தாசைகளை வழங்குவதன் மூலம் ந்த நாட்டில் வீடுகளை உரிமையாக கொண்ட ஒரு சமுதாயத்தினை உருவாக்குவதே அமைச்சா் சஜித் பிரேமதாசாவின் அடிப்படை நோக்கமாகும்.

அந்த வகையில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் திருகோணமலை மாவட்டத்தின் காரியாலயம் ஊடாக 2015ல் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கபட்டுள்ளது. அத்துடன் வீடமைப்புக் கடன் காணியற்றோருக்கு காணி வீடமைப்புக் கடன் போன்ற திட்டத்தின் கீழ் இதுவரை 23 மாதிரிக் கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வீடமை்பபு அபிவிருத்தி அதிகார சபையின் தகவலின் படி 56941 வீடுகள் திருமலை மாவட்டத்தில் தேவையாக உள்ளது. அத்துடன் அடிப்படை வசதிகள் குறைந்த வீடுகள் 51093 உள்ளன.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் திருமலை மாவட்டத்தில் கடந்த 2015-2017 வரை பின்வரும் வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டஙக்ள நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

செந்துரு பியச கடன் வேலைத்திட்டத்தின் கீழ் 84 வீடுகளும், இந்திய உதவித வேலைத்திட்டத்தின் கீழ் 24 வீடுகள், கிராம சக்தி வேலைத்திட்டம் கீழ் 100 வீடுகள், சிறுநீரக நோயாளா்களுக்கான வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 47 வீடுகள், விருசுமித்துரு வீடமைப்புக் கடன் 14, செவன உதவி வேலைத்திட்டத்தின் கீழ் 2053 வீடுகள், சம்பத் செவன கடன் வேலைத்திட்டத்தின் கீழ் 50 வீடுகள். செமட்ட செவன வீடுகள் திருத்தி அமைத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் 4144 வீடுகள், செமட்ட செவன மாதிரிக் கிராம வேலைத்திட்டத்தின் கீழ் 31 கிராமங்கள் செமட்ட செவன பரவலான கடன் வேலைத்திட்டத்தின் கீழ் 2052 வீடமைப்பு கடன்கள் செமட்ட செவன சில்பிய சவிய வேலைத்தி்ட்டத்தின் கீழ் ்நிர்மாணத்துறையில் 120 பேர் பயிற்சி அளிக்கப்பட்டது போன்ற . திட்டங்கள் ஆகும்.

திருகோணமலை மாவட்டத்தில் கோமரங்கடவல பிரதேச செயலாளா் பிரிவில் கல்யாணபுரவில் நிர்மாணிக்க்பபட்ட 61வது கிராமமான ” பொகுனுமக” மற்றும் 62வது கிராமமான ”ரண்சிரிகம ” கிராமமும் மூதுாா் பிரதேச செயலாளா் பிரிவில் இக்பால் நகரில் நிர்மாணிக்க்பட்ட 63வது மொஹமதியா நகா், 64வது அபுராா் நகா் ஆகிய மாதிரிக் கிராமங்கள் 2018. மே 04. 05ஆம் திகதிகளில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசாவினால் மக்களிடம் கையளிக்க்பட்டது.

இவ் 4 வீடமைப்புத்திட்டத்தில்90 வீடுகள் நிர்மாணிக்க்பபட்டுள்ளன. இவ் வீடுகள் நிர்மாணிக்க வென 20 போ்ச் காணித் துண்டுகள் பயணாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதற்கான காணி உரிமைப்பத்திரமும் 90 வீட்டுரிமையாளா்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது. வீடுகளை நிர்மாணிக்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் குறைந்த வட்டி வீதத்தில் வீடமைப்புக் கடன்களும் வழங்கப்பட்டன. இத்திட்டத்திற்காக பாதை வசதிகள், குடிநீா், மிண்சாரம் உட்பட சகல அடிப்படை வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன இதற்காக 100 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட நிதி அரசினால் செலவழிக்க்பட்டுள்ளது.

இவ் வைபவத்தின்போது. விசிரி வீடமைப்புக் கடன் திட்டத்தின் கீழ் 200 குடும்பங்களுக்கு 200 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது. அத்துடன் சொதுரு பியச வீடமைப்புக் கடன் திட்டத்தின் கீழ் 100 குடும்பங்களுக்கு 200 இலட்சம் ரூபா நிர்மாணத்துறையில் பயிற்சிஅளிக்கப்பட்ட மேசன் தச்சுத் தொழிலாளா்கள் 100 பேருக்கான உபகரணங்கள் பொதிகள் கையளிக்கப்பட்டன, சிறுநீரக வியாதிகளினால் பாதிக்க்ப்பட்ட 40 நோயாளிகளுக்கு 80 இலட்சம் ருபா வீட்டு உதவித் திட்டம் வழங்கி வைத்தல், மேலும் வயது முதிா்ந்தோ்களுக்கு மூக்கு கண்னாடி அணிவித்தல் போன்ற திட்டங்கள் அமைச்சா் சஜித் பிரேமதாச மற்றும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வின்போது திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணா்கள் இம்ரான் மஹ்ருப், அப்துல்லா மஹ்ருப் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவா் எஸ். பலன்சூரியவும் கலந்து சிறப்பித்தனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here