வாழைச்சேனை பொது மைதானத்தில் சமூக சீர்கேடு

0
216

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

வாழைச்சேனை பொது மைதானம் வாயில் கதவு திறந்து கிடப்பதால் இரவு நேரங்களில் சமுகச் சீர்கேடான விடயங்கள் நடைபெறுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் தெரிவித்தார்.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வு சபையின் கேட்போர் கூடத்தில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!

பிரதேச அபிவிருத்தியின் முக்கியம்; ஒற்றுமையின் தேவைப்பாட்டுடன் செயற்பட வேண்டும், நாட்டில் முன்மாதிரியான சிறந்த சபையாக இச்சபையின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

சபைக்கு சொந்தமான சகல உடமைகளும் சபைக்கு கீழ் கொண்டுவரப்பட்டு சபையினால் பரிபாலிக்கப்பட வேண்டும். சபையின் சொத்துக்கள் தனி நபருக்கோ, தனி நிறுவனங்களுக்கோ, மதத்தலங்களுக்கோ பரிபாலனம் செய்ய அனுமதிக்கக் கூடாது.

சபையில் அமைய அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்கள் அனைவரையும் விகிதாசார அடிப்படையில் நிரந்தரமாக்க ஆவண செய்யும் படி கேட்பதோடு ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்கள் அவரவர் பதவிகளில் அமர்த்தப்பட்டு சபை நிருவாகத்தை ஒழுங்கமைக்கும் படி கேட்கின்றேன்.

சபைக்குட்பட்ட மைதானங்கள் புனரமைப்பு செய்யப்பட வேண்டும். அத்தோடு வாழைச்சேனை பொது மைதானம் வாயில் கதவு திறந்து கிடப்பதால் இரவு நேரங்களில் சமுகச் சீர்கேடான விடயங்கள் நடைபெறுகின்றது. முக்கியமான தமிழ் பிரதேசங்களில் தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்தும் வகையில் சின்னங்கள் வைக்கப்பட வேண்டும். மேலும் வீதி புனரமைப்பு, மின்விளக்கு பொருத்துதல் போன்ற நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலை பற்றி கதைத்தவர் இச்சபையில் ஆனந்த சுதாகரனின் குழந்தைகளின் எதிர்காலம் கருதி அவரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஒரு பிரேரனையை சபையில் ஏகமனதாக நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சபையின் இறுதி நேரத்திலும் இந்த விடயத்தை மீண்டும் சபையின் கவனத்துக்கு கொண்டு வந்து ஏகமனதாக பிரேரனையை நிறைவேற்றப்பட்டது. இப்பிரேரனையை எழுத்து வடிவமாக்கி நாட்டின் ஜனாதிபதி உட்பட சம்பந்தப்பட்ட சகலருக்கும் அனுப்பி வைக்கும் படியும் தவிசாளர் அதற்;கு ஆவண செய்யும் படியும் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here