இவ்வருடம் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கான அனுமதி சான்றிதழ்.

0
702

இம்முறை கிழக்கு மாகாணத்தில் இருந்து ( 2018ம் ஆண்டு) ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகளுக்கான அனுமதிச்சான்றிதழ் முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் அவர்களின் வழிகாட்டலில் பின்வரும் தினங்களில் விநியோகிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே 2018ம் ஆண்டு ஹஜ்ஜை நிறைவேற்ற திணைக்களத்தில் விண்ணப்பித்தவர்களில் 9400 இலக்க பதின் கீழ் உள்ள, ஹஜ் செல்வதை உறுதிப்படுத்துமுகமாக திணைக்களத்தில் கட்டுப்பணம் செலுத்திய இலக்கங்களை உடைய ஹாஜிகள் பிணவரும் இடங்களில் தமது அனுமதிச்சான்றிதழ்களை 2018.05.12ம் திகதி சனிக்கிழமை காலை 9.00மணி தொடக்கம் 4.00 மணிவரை பெற்றுக்கொள்ள முடியும்.
அத்தோடு தமது கடவுச்சீட்டு மற்றும் கட்டுப்பணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டு ஆகியனவற்றை கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிண்றீர்கள்.

திருகோணமலை மாவட்டம்- கிண்ணியா நடுப்பள்ளிவாசல்
மட்டக்களப்பு மாவட்டம் – முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிராந்திய காரியாலயம், காத்தான்குடி.
அம்பாறை மாவட்டம் – நிந்தவூர் மொஹிதீன் பெரிய பள்ளிவாசல்.

ஏ.எல். ஜுனைட் நளீமி
பொறுப்பதிகாரி
முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிராந்திய காரியாலயம்
ஹிஸ்புல்லாஹ் மண்டபம்,
காத்தான்குடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here