ஓட்டமாவடி – மீராவோடை தாருஸ் சுன்னா இஸ்லாமிய பாடசாலையின் முதலாவது பரிசளிப்பு விழா.

0
776

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பிரிவின் கீழ் இயங்கிவரும் மீராவோடை தாருஸ் சுன்னா இஸ்லாமிய பாடசாலையின் முதலாவது பரிசளிப்பு விழாவும் மாணவர் கெளரவிப்பு நிகழ்வும் நேற்று (10) ம் திகதி வியாழக்கிழமை பாடசாலையின் அதிபரும் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் செயலாளருமாகிய அஷ்ஷெய்க் எச்.எல். முகைதீன் பலாஹி அவர்களின் தலைமையில் மீராவோடை அல் ஹிதாய வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளோடு இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவரும் கலாசார உத்தியோகத்தருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி, ஜம்இய்யாவின் பிரதித் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தருமான அஷ்ஷெய்க் எஸ்.எச். அரபாத் சஹ்வி மற்றும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி மத்தியஸ்த சபையின் தவிசாளர் யூ.எல்.எம். இல்யாஸ் ஷர்கி, மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் உறுப்பினர் எம்.எல். சலாகுதீன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் குறித்த பாடசாலையில் கல்வி கற்று சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(எச்.எம்.எம்.பர்ஸான்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here