வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் முப்பெரும் நிகழ்வு

0
363

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் முப்பெரும் நிகழ்வு வெள்ளிக்கிழமை பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஐ.எம்.இம்தியாஸ், வாகரை பொலிஸ் உத்தியோகத்தர் எஸ்.அமீர் அலி, பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள்,  பழைய மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பரிசளிப்பு விழாவினை முன்னிட்டு பாடசாலையின் Key Tag வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், 2013ம் ஆண்டு சாதாரண தர மாணவர்களினால் பாடசாலை நூலகத்திற்கு உயர்தர மாணவர்களுக்கான புத்தகங்கள் கையளிக்கப்பட்டதுடன், அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற தேசிய கால்பந்தாட்ட நடுவர் தகுதிப் பரீட்சையில் கல்குடாவைச் சேர்ந்த ஏ.எல்.எம். இர்பான் தெரிவு செய்யப்பட்டமையை பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஐ.எம்.இம்தியாஸ் தனது முதல் மாத சம்பளத்தினை விஞ்ஞான உயர்தர கல்வி மேம்பாட்டிற்கு வழங்கி வைத்தார். மேலும் ஒவ்வொரு மாத சம்பளமும் விஞ்ஞான உயர்தர கல்வி மேம்பாட்டிற்கு வழங்குவதாகவும் வாக்குறுதியளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here