வாழைச்சேனை, ஓட்டமாவடி வீதி வடிகான் மற்றும் நடைபாதையுடன் கூடிய 11 மீட்டர் அகலம் கொண்ட பாதையாக அமைக்க கோரல்

0
287

வாழைச்சேனை, ஓட்டமாவடி வீதி வடிகான் மற்றும் நடைபாதையுடன் கூடிய 11 மீட்டர் அகலம் கொண்ட பாதையாக அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி கோறளைப் பற்று மத்தி சிவில் சமூக அமைப்புகளின் கூட்டமைப்பினர் 11.05.2018ம் திகதி காலை 11.30 மணிக்கு கோறளைப் பற்று மத்தி பிரதேச செயலாளர் எச்.எஸ்.முஸம்மில் அவர்களிடமும் மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி அவர்களிடமும் மேலும் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர், கோறளைப் பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர், வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாக சபை, பிரதேச சபை உறுப்பினர்களிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

இதன் போது எதிர்காலத்தில் ஏற்படும் வெள்ள அணர்த்தம் மற்றும் வீதி விபத்து வாகன நெரிசளில் இருந்து பாதுகாப்பதுடன் இவ்வீதியின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துறைக்கப்பட்டது.

(ஏ.எல்.எம்.லியாப்தீன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here