பிரதியமைச்சர் அமீர் அலியை வரவேற்கும் நிகழ்வும் விருந்துபசாரமும்

0
217

(எச்.எம்.எம்.பர்ஸான்)

புதிய பிரதியமைச்சை பொறுப்பேற்றுக் கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் மீன்பிடி நீரியல் வளங்கள் அபிவிருத்தி கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களை வரவேற்கும் நிகழ்வும் விருந்துபசாரமும் இன்று (12)ம் திகதி சனிக்கிழமை பொத்தானை கழுவாமடுவில் இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்குடா கிளையின் ஏற்பாட்டில் ஒன்பது மாடுகளை அறுத்து விருந்தளித்த இந்நிகழ்வில் கல்குடா தொகுதியிலுள்ள பல பிரதேசங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். அடிப்படை வசதியற்ற குறித்த பிரதேசத்தில் பொதுமக்கள் எவ்வித அசெளகரிகங்களும் இல்லாமல் உணவுகளை உண்ணுவதற்கு  கூடாரங்களை அமைத்து சிறந்த ஏற்பாடுகளை செய்திருந்தமை சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்வுக்கு பிரதியமைச்சர் அமீர் அலி, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ. அமிஸ்டீன் (அஸ்மி) மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கல்வி அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here