கல்முனையில் அரச ஒசுசல

0
216

(அகமட் எஸ். முகைடீன்)

அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹரீஸின் வேண்டுகோளுக்கமைவாக விரைவில் கல்முனையில் அரச ஒசுசல நிலையம் திறப்பதற்கான நடவடிக்கையினை சுகாதார அமைச்சு மேற்கொள்ளவுள்ளது.

சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ராஜித சேனாரத்ன நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோது அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மக்கள் செறிந்து வாழும் கல்முனை நகரில் அரச ஒசுசல நிலையம் ஒன்றின் அவசியம் தொடர்பில் அமைச்சருக்கு எடுத்துக்கூறி குறித்த வேண்டுகோளை விடுத்தார்.

அதற்கமைவாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கல்முனையில் அரச ஒசுசல நிலையம் ஒன்றை திறப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அரச ஒசுசல பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்துள்ளார்.

அந்தவகையில் எதிர்வரும் 16ஆம் திகதியளவில் உயர் மட்டக் குழு ஒன்று கல்முனைக்கு விஜயம் செய்து அப்பிரதேசத்தில் அரச ஒசுசல நிலையம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here