நாவலடி ரஹ்மத் நகரில் ஏழைக் குடும்பத்திற்கு கூரைத் தகடுகள் வழங்கி வைப்பு.

0
87

ஓட்டமாவடி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட நாவலடி ரஹ்மத் நகரில் வசிக்கும் குடும்பமொன்று தமது குடிசைக்கான கூரைத் தகட்டினை பெற்றுத்தருமாறு கெளரவ பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜீ. அஸீஸுல் ரஹீம் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க நாவலடி சீ.ஐ.சீ பால் குளிரூட்டும் நிலைய நிருவாகத்திடம் இதற்கான நிதியுதவியினை கோரியதற்கிணங்க 15,000 ரூபாய் பெறுமதியான கூரைத் தகடுகளை பெற்றுக்கொடுத்தனர்.

அக் கூரைத் தகடுகளை நேற்று கெளரவ பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜீ. அஸீஸுல் ரஹீம் அவர்களினால் உதவி கோரிய குடும்பத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது. இக் கையளிப்பு நிகழ்வில் சீ.ஐ.சீ பால் குளிரூட்டும் நிலையத்தின் செயலாளர் ஏ.எம்.எம்.ஹாலித் மற்றும் ஹாலித் இப்னு வலீத் ஜும்ஆப் பள்ளிவாயல் செயலாளர் ஏ.எம். றிஸ்வான், நாவலடி கிராம அபிவிருத்தி சங்க மற்றும் அந்நூர் ஜும்ஆப் பள்ளிவாயல் செயலாளர் ஏ.பீ.காதர் முகம்மட், பெளசுல் அமீன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

கூரைத் தகட்டுக்கான நிதியுதவியினை வழங்கிய நாவலடி சீ.ஐ.சீ பால் குளிரூட்டும் நிலையத்தின் தலைவர் ஏ.எம்.ஜெளபர், செயலாளர் ஏ.எம்.எம்.ஹாலித் உபதலைவர் எம்.ஐ.அஹமட் லெப்பை பொருளாளர் ஏ.எம்.சுபைதீன் மற்றும் முகாமையாளர் எஸ்.ரீ.எம். நியாஸ் ஆகியோர்களுக்கு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜீ. அஸீஸுல் ரஹீம் (BA) அவர்கள் தமது நன்றியினை தெரிவித்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here