சித்திலெப்பை ஆய்வுப் பேரவையின் முதலாவது தேசிய ஆய்வு மாநாடு

0
430

(அஷ்ரப் ஏ சமத்)

சித்திலெப்பை ஆய்வுப் பேரவை தனது முதலாவது தேசிய மாநாட்டினை எதிர்வரும் ஜூலை 22ந் திகதி கொழும்பில் நடாத்தத் தீர்மானித்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ் ஆய்வு மாநாட்டின் தொனிப்பொருள் “முஸ்லிம் தேசியமும் சகவாழ்வும்” என்பதாகும்.
மேற்படி விடயமாக நேற்று முன்தினம்(12) கொள்ளுப்பிட்டியில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநட்டின்போது சித்திலெப்பை ஆய்வு மன்றத்தின் தலைவா் சட்டத்தரணி மசூம் மௌலானா, செயலாளா் நியாஸ் ஏ சமத், பொருளாளா் பைசால். டொக்டா் றிஸ்வி, ஊடக ஒருங்கினைப்பாளா் எம்.ஏ.எம் நிலாம் ஆகியோா்களும் கருத்து தெரிவித்தனா்.

அவா்கள் தொடாந்து கருத்து தெரிவிக்கையில் –

இம்மாநாட்டுக்கான பேராளர்களினை தெரிவு செய்யும் பணியில் ஆய்வகம் ஈடுபட்டு வருகின்றது. மாநாட்டின் பேராளர்கள் சமூக நோக்குடையவர்களாகவும், அதனோடு தொடர்பான ஆய்வுகளில் விருப்பமுள்ளவர்களாகவும், தொடர்புள்ளவர்களாகவும் இருத்தல் இம்மாநாட்டின் நோக்கத்தினை அடைந்துகொள்ள உதவும் என ஆய்வுப் பேரவை கருதுகின்றது. இந்த அளவுகோலுக்குள் தன்னை இனங்காணுபவர்கள் ஆய்வுப் பேரவையுடன் தொடர்புகொண்டு பதிவுசெய்து கொள்ளலாம்.
இம்மாநாட்டுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையான ஆய்வாளர்களையும் பேராளர்களையும் அழைக்கத் தீர்மானித்துள்ளதனால் மாநாட்டில் கலந்துகொள்ளும் உங்களின் விருப்பத்தினை முன்கூட்டியே உறுதிப்படுத்திக்கொள்ள பேரவையின் பொதுச்செயலாளரின் முகவரிக்கு விருப்புக்கடிதத்துடன் சுயவிலாசமிட்ட கடிதவுறையினை 25-05-2018 திகதிக்கு முன் அனுப்பிவைக்குமாறு சித்திலெப்பை ஆய்வுப் பேரவை வேண்டுகின்றது. ஆய்வுக்குழுவினால் பரிந்துரைக்கப்படுபவர்கள் மாத்திரம் மாநாட்டுக்கு அழைக்கப்படுவார்கள்.
இம்மாநாட்டில் “நமது முஸ்லிம் நேசன்” எனும் தலைப்பில் சிறப்பு மலரொன்றினை வெளியிட சித்திலெப்பை ஆய்வுப் பேரவை ஆயத்தங்களினைச் செய்து வருகின்றது. இச்சிறப்பு மலருக்கான ஆய்வுக் கட்டுரைகளை ஆய்வறிஞர்களிடமிருந்து பெறவே ஆய்வுப் பேரவை எதிர்பார்க்கின்றது.
அறிஞர் சித்தி லெப்பையுடன் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளினை ஆய்வறிஞர்கள் கணணிப் பதிவில் ஏ4 தாளில் 3 பக்கங்களுக்குக் குறையாமலும் 5 பக்கங்களுக்கு மேற்படாமலும் இருக்கத்தக்கதாக 10-06-2018 இற்கு முன்னதாக கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்குமாறும் சித்திலெப்பை ஆய்வுப் பேரவை கோருகின்றது. தரமானதாகக் கருதப்படும் கட்டுரைகள் மாத்திரம் ஆய்வுக்குழுவினால் பிரசுரிக்கத் தெரிவுசெய்யப்படும்.
மாநாட்டில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவிக்கவும் கட்டுரைகளை அனுப்பவும் பின்வரும் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும். பொதுச்செயலாளர், சித்திலெப்பை ஆய்வுப் பேரவை, இல. 16, 7வது ஒழுங்கை, கவுடான புறோட்வே, தெகிவளை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here