கண்டி தாக்குதல் விரைவில் அறிக்கை வௌியிடப்படும் – மனித உரிமைகள் ஆணைக்குழு

0
188

கண்டி பிரதேசத்தில் அண்மையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணை அறிக்கையை விரைவில் வௌியிட நடவடிக்கை எடுப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த 09ம் திகதி முதல் 12ம் திகதி வரை எழுத்துமூலம் மற்றும் வாய்மூலமான சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன்போது 100 இற்கும் அதிகமான சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்ய முடிந்ததாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்களிடமும் பிரதேச மக்களிடமும் தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக கண்டி பிரதேசத்தில் அரச அதிகாரிகளிடமும் எழுத்துமூலம் மற்றும் வாய்மூலமாக சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெற்றுக் கொள்ளப்பட்ட சாட்சிகளின் அடிப்படையில் விரைவாக அறிக்கை தயாரித்து அதனை வௌியிடுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இந்த சம்பவத்தில் யாராவது ஒரு தரப்பினரின்மனித உரிமைகள் மீறப்பட்டிருக்குமானால் அதனுடன் தொடர்புபட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் சம்பந்தமாக வௌிப்படுத்தப்படும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.

ad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here