காத்தான்குடியின் மூத்த எழுத்தாளர் ஜூனைதா ஷரீப் எழுதிய கனவுலகம் நூல் அறிமுக நிகழ்வு

0
380

(காத்தான்குடி டீன்பைருஸ்)

காத்தான்குடி பிரதேச செயலக கலாசார பிரிவின் அனுசரணையுடன் இடம் பெற்ற காத்தான்குடியின் மூத்த எழுத்தாளர் ஜூனைதா ஷரீப் எழுதிய ‘கனவுலகம்’; சிறுகதை தொகுப்பு அறிமுக நிகழ்வு (14.05.2018 திங்கள்) காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் உருத்திரன் உதயசிறி தலைமையில் இடம் பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக எம்.ரீ.எம்.றிஸ்வி (மஜீதி) (சிரேஷ்ட விரிவுரையாளர் இஸ்லாமிய கற்கைகள் துறைத் தலைவர், கிழக்கு பல்கலை கழகம்)
திருமதி றூபி வலன்றீனா பிரான்சிஸ் (சிரேஷ்ட விரிவுரையாளர், மொழித்துறை, கிழக்கு பல்கலை கழகம்)
பேராசிரியர் செ.யோகராசா (முன்னால் மொழித்துறை தலைவர்) கிழக்கு பல்கலை கழகம்) ஆகியோர்கள் கலந்து கொண்டதுடன் ஆய்வுரையும் நிகழ்த்தினர்.
இலங்கை வரலாற்றில் முஸ்லிம் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராக போற்றப்படும் ஜூனைதா ஷரீப் அவர்கள் காத்தான’கடி கச்சிமுஹம்மது கதீஜா தம்பத்களின் அன்பு மகனான இவர் காத்தான்குடி வலராற்றில் ஒரு ஆளுமைமிக்க கல்விமானாக வாழ்ந்து வருகின்றார்.

1990 காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக பணியாற்றி ஜூனைதா ஷரீப பல்சமய மக்களின் நன்மதிப்பை பெற்ற நாடறிந்த சிறந்த எழுத்தாளருமாவார். ஜூனைதா ஷரீப் என்ற புணைப் பெயரில் இவர் 20 மேற்பட்ட நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகளை படைத்திருப்பதுடன் இவற்றில் இவரது 13 நாவல்கள் நூலுருவில் வெளிவந்திருப்பதுடன் 8 நாவல்கள் பத்திரிகையில் தொடர் கதையாக வெளி வந்துள்ளமையும் சிறப்பம்சமாகும்.
இடம் பெற்ற கனவுலகம் சிறுகதை தொகுப்பு அறிமுக நிகழ்வுகள் யாவும் சிறப்பாக இடம் பெற்றதுடன் மேற்படி நிகழ்வில் காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர், கல்விமான்கள் கவிஞர்கள், கலாசார உத்தியோகஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here