தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக முஸ்லிம் சமூகம் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் – ஹிஸ்புல்லாஹ்.

0
191

(காத்தான்குடி டீன்பைரூஸ்)

தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக முஸ்லிம் சமூகம் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிப்பதிலேயே திட்டம்தீட்டி செயல்பட்டு வருகின்றனர். இலங்கையில் கூட முஸ்லிம்களுக்கு எதிரான செயல்பாடுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் ஒரு சுமுகமான நிலை ஏற்பட வேண்டும் என்பதற்காக வேண்டி நாம் எல்லோரும் ஒன்றினைந்து பாடுபட வேண்டிய நிலையில் இருந்து கொண்டிருக்கின்றோம் அனைத்தும் இறைவனின் நாட்டம் அவன் நாடாமல் எதுவும் நடக்காது என நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் ஏற்பாடு செய்த முற்பெரும் நிகழ்வுகளான அல்குர்ஆன் பரீட்சையில் சித்தியடைந்த மாணர்கள் கௌரவிப்பு, அல்-அக்ஸா ரெஸ்ட் இன் மற்றும் அல்-அக்ஸா சுப்பர் மார்கட் ஆகியவற்றிக்கான அடிக்கல் நடும் நிகழ்வுகள் இடம் பெற்றன நிகழ்வின் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கலந்து கொண்டார்.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உரையாற்றுகையில்-

இஸ்லாமியர் என்ற அடிப்படையில் நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து நிதானமாக செயல்படல் வேண்டும் இங்கு கட்டப்படு வருகின்ற அல-அக்ஸா பள்ளிவாயலுக்கு தேவையான எல்லா விடயங்களும் பூர்த்தியான நிலையில் உள்ளன இப்பள்ளிவாயலின் எதிர்கால திட்டங்களை கவனத்தில் கொண்டு பள்ளிவாயலின் செலவினத்திற்காக சுமார் 60 மில்லியன் செலவில் 17 அறைகளைக் கொண்ட 4 மாடி 5 ஸ்டார் ஹொட்டல் ஒன்றினை ஹிறா பௌண்டேசன் ஊடாக கட்டி பள்ளிவாயலுக்கு கொடுக்க உள்ளதாக இதன் தெரிவித்தார்.

காத்தான்குடியில் கட்டப்படுகின்ற அல்-அக்ஸா பள்ளிவாயல் என்பது தொழுவதற்காக மாத்திரமின்றி இப்பள்ளிவாயலில் இஸ்லாமிய நூலகம், மாரக்க வகுப்புகள், கலிவ நடவடிக்ககைகள் என் பல்வெறு விடயங்களை அமுல்படுத்தும் ஒரு பாரிய திடடங்களைக் கொண்டே இப்பள்ளிவாயல் அமைக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here