செம்மண்ணோடையில் இரு குர்ஆன் பாடசாலைகளின் மாணவர் வெளியேற்று விழா

0
180

செம்மண்ணோடை மத்ரஸதுஸ்ஸகிய்யா மற்றும் அல் இப்பத் குர்ஆன் பாடசாலைகளின் மேற்படி நிகழ்வு 14.05.2018ம் திகதி திங்கட்கிழமை பி.ப. 04.30 மணிக்கு மீராவோடை எம்.பீ.சீ.எஸ்.வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் அஷ்ஷெய்க் எம்.ரீ. அப்துர் ரஹ்மான் அஸ்ஹரி அவர்களின் தலைமையில் அஸ்ஸகிய்யா பாடசாலை அதிபர் ஆசிரியர் அஷ் ஷெய்க் ஷரீப் அலி அவர்களின் மேற்பார்வையில் அல்ஹாபில் நிசாம் அவர்களின் ஒருங்கிணைப்பில் சிறப்பாக இடம் பெற்றது.

இந்நிகழ்வில் அல் இப்பத் குர்ஆன் பாடசாலையின் ஆசிரியை மௌலவியா ருகையா ரஹ்மத் அவர்களும் அதிதிகளாக தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக்கல்லூரியின் அதிபர் எம்.பீ.எம் இஸ்மாயில் (மதனி) அவர்களும் உப அதிபர் ஏ.எச்.எம். இர்பான் (நஹ்ஜி), மௌலவி பௌசுல் அஹமட் (ஸலாமி), மற்றும் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது இரு மத்ரஸாக்களிலிருந்தும் சுமார் 35 மாணவ, மாணவிகள் புனித திருக்குர்ஆனை திறன்பட ஓத கற்று வெளியேறினர்.

செம்மண்ணோடை அல் மத்ரஸதுஸ்ஸகிய்யா மற்றும் அல் இப்பத் குர்ஆன் பாடசாலை இணைந்து நடாத்தும் 4வது விழா இது என்பதும் ஸகிய்யாவின் 13வது விழா இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here