வரலாற்றில் முதல்தடவையாக ஓட்டமாவடி – தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரி மாணவர்களால் சஞ்சிகை வெளியீடு.

0
447

ஓட்டமாவடி தியாவட்டவான் பிரதேசத்தில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம்அரபுக் கல்லூரியின் நான்காம் தர கா.பொ.த. உயர்தர மாணவர்களால் கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக “மஜல்லதுஸ் ஸலாம்” எனும் பெயருடைய சஞ்சிகை தொகுக்கப்பட்டு கல்லூரியின் முதல்வர் எம். பீ. எம். இஸ்மாயில் மதனி அவர்களால் (13) ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்லூரியின் முதல்வர் எம். பீ. எம். இஸ்மாயில் மதனி அவர்களும், சிறப்பு அதிதிகளாக கல்லூரியின் பிரதி அதிபர் அல்ஹாபிழ் ஏ. எச். இர்பான்,ஏ.எல். முஸ்தபா ஸலாமி மற்றும் கல்லூரியின் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் கல்லூரியின் நான்காம் தர மாணவர்களின் வாகுப்பாசிரியர் ஏ.ஆர். எம். இர்ஷாட் ஸலபி அவர்களால் கல்லூரி முதல்வர் எம். பீ. எம். இஸ்மாயில் மதனி அவர்களுக்கு சஞ்சிகை கொடுக்கப்படுவதையும், ஏனைய ஆசிரியர்களுக்கு நான்காம் தர மாணவர்களால் சஞ்சிகை கொடுக்கப்படுவதையும், நிகழ்வில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களினதும் புகைப்படங்களை காணலாம். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்லூரியின் முதல்வர் அவர்கள் இச்சஞ்சிகையை வெளியிட்ட மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்து, இதற்காக பாடுபட்ட அனைவருக்காகவும் பிரார்த்தித்து, நன்றி கூறி ஏனைய மாணவர்களுக்கும் உபதேசம் கூறி தனது வாழ்த்துரையை முடித்துக் கொண்டார். இச்சஞ்சிகை ரமழான் சிறப்பிதழாக அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here