சந்தை வியாபாரிகளின் நலன் கருதி சாலி ஹாஜியார் பௌண்டேஷனால் ”டென்ட்” கள் அன்பளிப்பு

0
341

ஏறாவூர் புன்னைக்குடா வீதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பொதுச் சந்தையில் அன்றாடம் வர்த்தகத்தில் ஈடுபடும் வியாபாரிகள் மழை மற்றும் வெயில் காலங்களில் எதிர் கொள்ளும் அசௌகரியங்களை கருத்திற் கொண்ட சாலி ஹாஜியார் பௌண்டஷன் தலைவரும் – ஏறாவூர் நகர சபையின் உறுப்பினருமான நளீம் ஹாஜியார் தனது அமைப்பின் ஊடாக – 100 சந்தை வியாபாரிகளுக்கு டென்ட்களை பொதுச் சந்தை வியாபாரிகள் நலன்புரிச் சங்கத்தின் ஊடாக அன்பளிப்பு செய்தார்.

திங்கட்கிழமை மாலை பொதுச்சந்தை வளாகத்தில் நடந்த குறித்த நிகழ்வில் பிரதி அமைச்சர் அலி சாஹிர் மௌலானா -பிரதம அதிதியாக கலந்து கொண்டு டென்ட் களை அன்பளிப்பு செய்தார்-
இந் நிகழ்வில் – நகர சபை உறுப்பினர் ஜெமீல், முன்னாள் தவிசாளரும் பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களில் ஒருவருமான தஸ்லீம், தபாலதிபரும் அமைச்சரின் இணைப்பு செயலாளருமான நசீர் உட்பட பலர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here