நாபீர் பெளண்டேசனின் ரமழான் செய்தி

0
530

(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்)

அருள் நிறைந்த புனித ரமழான் மாதம் சுமந்துவரும் அனைத்து அருள்பாக்கியங்களையும், ஆன்மீக உயர்வுகளையும் சகல இஸ்லாமிய சகோதரர்களும் அடைந்து கொள்ள எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவருக்கும், அருள் புரிய வேண்டும் என சமூக சேவைகள் நிறுவனமான நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் உதுமான் கண்டு நாபீர் விடுத்துள்ள ரமழான் வாழ்த்து செய்தியில் தெரிவிக்கின்றார்.

மேலும்…உற்றார் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அன்று முதல் இன்று வரை எனது இன்ப துன்பங்களில் பங்கெடுத்துள்ள சகலரையும் அல்லாஹ் இந்த புனித ரமழான் மாதத்தில் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் சமத்துவத்துடன் ஒற்றுமையின் கயிற்றினை பலமாக பற்றிப்பிடித்தவர்களாக நிம்மதியான இஸ்லாமிய சமூகமாகவும்இ காத்திரமான பிரதேச தலைமைத்துவத்தின் கீழ் தூர நோக்கு சிந்தனையுடன் தங்களது வாழ்க்கையினை ஓளி மயமாக அமைத்துகொள்வதற்கு அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றேன்.

அத்தோடு ஒவ்வொரு ரமழான் மாதத்திலும் இஸ்ரேலிய யூத சமூகத்தினால் ஒடுக்கப்படும் எமது பாலஸ்தீன சகோதரர்களுக்காகவும், மத்திய கிழக்கில் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழும் சிரியா, ஈராக், எமன், ஆப்கானிஸ்தான் நாட்டு முஸ்லிம்களின் நிம்மதிக்காகவும் இந்த புனித மாதத்தில் அல்லாஹ்விடத்தில் மான்றாடுமாறு நாபீர் பெளண்டேசன் விடுத்துள்ள ரமழான் வாழ்த்து செய்தியில் மேற் கண்டவாறு தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here