மாவடிச்சேனை தஃவா சென்டருக்கு ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கி வைப்பு

0
236

(எம்.ரீ. ஹைதர் அலி)

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை தஃவா சென்டருக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதனை கையளிக்கும் நிகழ்வு அன்மையில் தஃவா சென்டரின் தலைவரும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தருமான அஷ்ஷெய்க். எஸ்.எச்.எம். அறபாத் தலைமையில் நடைபெற்றபோது இதில் பிரதம விருந்தினராக பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கலந்துகொண்டு நிருவாக சபையினரிடம் ஒலி பெருக்கி சாதனங்களை கையளித்தார்.

புதின ரமழான் மாதத்தின் மிகவும் அத்தியாவசிய தேவைப்பாடாக இருந்த ஒலி பெருக்கி சாதனங்களை பெற்றுத்தந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களுக்கு மாவடிச்சேனை மத்ரஸதுந் நூர் தஃவா சென்டரின் நிருவாக சபை உறுப்பினர்கள் மற்றும் அப்பிரதேசத்திலுள்ள மஹல்லாவாசிகள் அனைவரும் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

இப்புனித மாதமான ரமழான் மாதத்தில் நம் அனைவரினதும் பாவங்களையும் மண்ணித்து நாம் ஏனையவர்களுக்கு வழங்கும் உதவிகளையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here