பள்ளிவாயல் மீது தாக்குதல் நடத்த சீருடை அணிந்த பொலிஸார் திறந்து கொடுத்தார்கள்.கலகத்தை அடக்க செயற்பட்ட எம்மீது பழி போடுகிறார்கள்..

0
283

பாதுகாப்பு படையினர் வேடிக்கை பார்க்க இடம்பெற்ற திகன வன்முறை சம்பவம் தொடர்பில் தன்னிடம் விசாரணை மேற்கொள்வது புதுமையான விடயம் என பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம குறிப்பிட்டார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிடுகையில்,

திகன அசம்பாவிதங்களின் போது அங்கு அமைதியை ஏற்படுத்த செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நான் என்பதை அமைச்சர் ரவுப் ஹக்கீம் பாராளுமன்றில் குறிப்பிட்டார்.

நான் தீவிரவாத தடுப்பு பிரிவிற்கு விசாரணைக்கு செல்லும் முன்னர் அமைச்சர் ஹக்கீம் வாக்குமூலத்தில் தனது பெயரை குறிப்பிடுமாறு கூறியதோடு தேவை ஏற்பட்டால் நான் எவ்வளவு தூரம் அவர்களுக்கு உதவி செய்தேன் என்பதை தீவிரவாத தடுப்பு பிரிவிற்கு தெளிவுபடுத்துவடுத்துவதாக என்னிடம் கூறினார்.அதனையும் நான் எனது வாக்குமூலத்தில் பதிவு செய்துள்ளேன்.

பள்ளிவாயல் மீது தாக்குதல் நடத்த சீருடை அணிந்த பொலிஸார் திறந்து கொடுத்தார்கள் கலகத்தை அடக்க செயற்பட்ட எம்மீது பழி போடும் போது இவற்றை கூறாமல் இருக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.

joint opposition tamil media unit

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here