நாட்டை பாதுகாத்த ராணுவத்தினர் இன்று தீவிரவாதிகளாகவும், விடுதலை புலிகள் ராணுவமாகவும் ஆகிவிட்டனர்

0
449

மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் நாட்டில் இயற்கை அழிவுகள் அதிகரித்துள்ளன ..

மைத்திரிபால சிரிசேன அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னரே நாட்டில் இயற்கை அழிவுகள் அதிகரித்துள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

இன்று அம்பலந்தொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.

நாட்டை பாதுகாத்த ரானுவத்தினர் இன்று தீவிரவாதிகள் ஆகிவிட்டனர்.விடுதலை புலிகள் இன்று ரானுவத்தினர் ஆகிவிட்டனர்.அமைச்சர் ராஜித சேனராத்ன அமைச்சரவை பேச்சாளர் என்பதை மறந்து செயற்படுகிறார்.அவர் அமைச்சரவை பேச்சாளராக வந்த நாள் முதல் இந்த நாட்டை காட்டிக்கொடுக்கும் வகையில் கருத்து வெளியிட்டுவரும் அதேவேளை இனங்களுக்கு இடையே பிணக்குகளை ஏற்படுத்தும் வகையிலும் கருத்து வெளிட்டு வருகிறார்.

அரசியல் தலைவர்கள் அடுத்த தலைவர்களுக்கு பொய்யாக சேறு பூசுவதுவதும் பொய்யான சோடிக்கப்பட்ட கதைகளை கட்டி அவர்களின் பெயர்களுக்கு கலங்கம் ஏற்படுத்துவதும் நல்ல செயற்பாடல்ல.

அன்று மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி அவர்கள் ராஜபக்‌ஷ குடும்பத்தினர் திருடர்கள் என கூறினார். எம்மிடம் தங்க குதிரை, லம்போகினி, ஆடம்பர மாளிகைகள், ஹெலிகொப்டர் ஆகியவை உள்ளன் என கூறினார்கள்.அன்று அவ்வாறு கூறிய ஜனாதிபதியின் செயலாளர்கள் இன்று லஞ்சம் பெறும்போது கையும் களவுமாக பிடிபடுகிறார்கள்.

பொய்யாக எமது பெயர்களை களங்கப்படுத்தியவர்களுக்கு இன்று திரும்ப கிடைக்கிறது. நாட்டின் தலைவர் அராஜகமான ஒருவராக இருந்தால் அந்த நாடு சீரழிந்துவிடும் நேரத்திற்கு மழை பெய்யாது, வெள்ளப்பெருக்கு ஏற்படும், மனித உயிர்கள் பலியாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அப்போது கூறினார்.தற்போது நாட்டில் என்ன நடக்கிறது என்பதை நாம் கேட்க விரும்புகிறோம்.

இந்த நல்லாசிட்சியிலேயே புத்தாண்டு தினத்தில் மீத்தொட்டுமுல்ல குப்பை மேடு சரிந்துவிழுந்தது. கடந்த வருடம் வெள்ளம் ஏற்பட்டது, அரநாயக்க மண் சரிவில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியானார்கள், சாலாவ வெடிப்பு சம்பவத்தில் பாரிய அழிவுகள் ஏற்பட்டன.

இன்று பாரிய வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.ஆனால் இன்று நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என கூறுகிறார், அதிகமாக மழை பெய்வதன் காரணமாக ஆறுகள், குளங்கள், கால்வாய்கள் நிரம்புவாதாக கூறுகிறார்.

தற்போதாவது எம்மீது சேறு பூசுவதை நிறுத்தி மக்களுக்கு நன்மை செய்யுமாறு அவர் குறிப்பிட்டார்.

JOINT OPPOSITION TAMIL MEDIA UNIT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here