(எச்.எம்.எம்.பர்ஸான்)
கல்குடா ஜம்இயது தஃவதில் இஸ்லாமியாவின் சமூகசேவைகள் பிரிவின் ஏற்பாட்டில் கல்குடா தொகுதியிலுள்ள தந்தையை இழந்த மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று (26) சனிக்கிழமை மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
குறித்த இந்நிகழ்வில் அதிதிகளாக ஜம்இய்யாவின் பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.அரபாத் சஹ்வி, அஷ்ஷெய்க் உமர்தீன், அஷ்ஷெய்க் எம்.ரீ.அப்துர்ரஹ்மான் அஸ்கரி மற்றும் பொருளாளர் ஜே.எம்.இம்தியாஸ் ஆகியோர்கள் கலந்துகொண்டு வருகைதந்த மாணவ மாணவிகளுக்கு நிதியுதவியினை வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.