மீராவோடை தாருஸ்ஸலாமில் பெண்களுக்கான இஸ்லாமிய கொள்கை விளக்க தொடர்வகுப்பு

0
110

(எச்.எம்.எம்.பர்ஸான்)

புனித ரமழான் மாதத்தை தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் தஃவாப் பிரிவு ஏற்பாடு செய்துள்ள ரமழான் கால பெண்களுக்கான இஸ்லாமிய கொள்கை விளக்க தொடர் வகுப்பு மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் ஒன்றுவிட்ட நாட்களில் இடம்பெற்றுவருகின்றது.

ஓட்டமாவடி – தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம்.இஸ்மாயில் மதனி அவர்களால் நடாத்தப்படும் இத் தொடர் வகுப்பில் அனைத்து தாய்மார்களும் சகோதரிகளும் கலந்துகொண்டு தங்களுடைய ரமழான் காலங்களை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here