நாவலடி மர்க்கஸ் அந்நூர் கலாபீடத்திற்கு ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கி வைப்பு

0
399

(எம்.ரீ. ஹைதர் அலி)

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவலடி மர்க்கஸ் அந்நூர் கலாபீடத்திற்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து கை ஒலி பெருக்கி மற்றும் மைக் வழங்கி வைக்கப்பட்டது.

இதனை கையளிக்கும் நிகழ்வு அன்மையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கலந்துகொண்டு ஒலி பெருக்கியினை கலாபீடத்தின் பிரதி அதிபர் அஷ்ஷெய்க் வீ.ரீ.எம்.முஸ்தபா (தப்லீகி) மற்றும் நிருவாகிகளிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரின் ஊடகச் செயலாளரும், கல்குடாத் தொகுதி இணைப்பாளருமான எம்.ரீ. ஹைதர் அலி அவர்களும் கலந்துகொண்டார்.

இப்புனித மாதமான ரமழான் மாதத்தில் நம் அனைவரினதும் பாவங்களையும் மண்ணித்து நாம் ஏனையவர்களுக்கு வழங்கும் உதவிகளையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here