JDIK யின் அனுசரணையில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இப்தாரும் மார்க்க சொற்பொழிவு நிகழ்வும்.

0
241

(எச்.எம்.எம்.பர்ஸான்)

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸின் ஏற்பாட்டில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் அனுசரணையில் விசேட இப்தார் நிகழ்வும் மார்க்க சொற்பொழிவும் (24) வியாழக்கிழமை இடம்பெற்றது.

இவ் இப்தார் நிகழ்வில் சன்மார்க்கச் சொற்பொழிவை மருதமுனை தாருல் ஹுதா மகளிர் அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி எம்.எல்.முபாரக் மதனி அவர்கள் நிகழ்த்தினார்கள்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்ட இவ் இப்தார் நிகழ்வில் அதிதிகளாக கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் நிருவாகத் தலைவர் ஏ.ஹபீப் காசிமி, இஸ்லாமிய அழைப்பாளர் இத்ரீஸ் ஹசன் சஹ்வி மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here