கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு.

0
234

(எச்.எம்.எம்.பர்ஸான்)

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றுவரும் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளின் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கு அவர்களுக்கான புலமைப் பரிசில் திட்டம் ஊக்குவிப்பு பணத் தொகை வழங்கும் நிகழ்வு நேற்று (27) ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் அதன் நிருவாகத் தலைவரும் நாவலடி மர்கஸ் அந்நூர் கலாபீடத்தின் அதிபருமாகிய ஏ.ஹபீப் காசிமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் பொதுத் தலைவரும் கலாசார உத்தியோகத்தருமானா அஷ்ஷெய்க் ஏ.எல். பீர் முகம்மட் காசிமி, செயலாளர் அஷ்ஷெய்க் எச்.எல்.முகைதீன் பலாஹி, மற்றும் எம்.ரீ.அப்துர் ரஹுமான் அஸ்ஹரி ஆகியோர் கலந்து கொண்டு புலமைப் பரிசில்களை வழங்கிவைத்தனர்.

இந்நிகழ்வில் கல்குடா பிரதேசத்திலுள்ள பல்கலைக்கழக மாணவ மாணவிகள் 29 பேருக்கு முதற்கட்டமாக குறித்த ஊக்கிவிப்பு பணத்தொகை வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here