ஓட்டமாவடி பிரதேச சபையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்ட கலந்துரையாடல்

0
383

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் அதேவேளை ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அமிஸ்டீம் (அஸ்மி) தலைமையில் இவ்வேலைத்திட்டம் தொடர்பான முன்னேற்ற கலந்துரையாடல் ஒன்று பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் பிரதேச சபையின் சார்பில் பிரதேச சபையின் உறுப்பினர் எம்.பீ.எம். ஜௌபர், செயலாளர், பிரதம முகாமைத்துவ உதவியாளர், உள்ளுராட்சி உதவியாளர் மற்றும் சுகாதாரப் பகுதி மேற்பார்வையாளர்கள் ஆகியோரும் கோறளைப்பற்று மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் சார்பில் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி. பாத்திமா ஸாஹிரா, மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர் எம்.எச்.எம். பழீல், சுகாதாரப் பரிசோதகர்களான ஏ.கே. ஜௌபர், ஏ.எம்.எம். அனீஸ், யு.எல்.எம். ஜின்னாஹ் ஆகியோர் உட்பட டெங்கு ஒழிப்பு பணிக்கு விஷேடமாக அமர்த்தப்பட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த தவிசாளர், நடைபெற்று வரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் புகைவிசிறல் பணிக்கான எரிபொருள் செலவினமாக ஓட்டமாவடி பிரதேச சபையினால் ரூபா. 151,000.00 இதுவரை வழங்கப்பட்டுள்ளதாகவும், இப்பணிகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு பிரதேச சபையின் சார்பாக இரு உத்தியோகத்தர்களும் விஷேடமாக பணிக்கமர்த்தப்பட்டுள்ளதாகவும், மேலும், டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் பொருட்டு வீடுகளில் உள்ள கிணறுகளுக்கு மீன்கள் இடுவதற்காக ஏற்படும் செலவுகளை குறித்த பிரதேசத்தில் இயங்கி வரும் சனசமூக நிலையங்களின் நிதியின் மூலம் ஈடுசெய்வதற்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கௌரவ தவிசாளர் ஐ.ரீ. அமிஸ்டீம் (அஸ்மி) தெரிவித்தார்.

இம்மாதம் நடைபெற்ற கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும் மீன்பிடி, நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலியினால் வழங்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய,

எமது பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்திற்கான பணிகளை முன்னெடுப்பதற்காக ஓட்டமாவடி பிரதேச சபையின் தலைமையில் இவ்வேலைகள் பொறுப்பேற்று நடாத்தப்பட வேண்டுமெனவும், மேற்கொண்டு பிரதேச சபை, ஓட்டமாவடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், ஏனைய திணைக்களங்கள், பொது அமைப்புக்கள் என்பன இணைந்து தேவையான பணிகளை செயற்படுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here