முஸ்லிம் குரல் பத்திரிகை மீண்டும் மலர வேண்டும்

0
575

(அபூ இன்ஷிபா)

மூன்றாவது மனிதன் புகழ் எனது மரியாதைக்குரிய சகோதரன் எம். பெளசர் அவர்களின் வழிகாட்டலில் 2000 ம் ஆண்டுகளில் முஸ்லிம்களின் உரிமைகளை அரசியல் பக்கச் சார்பில்லாமல் தைரியமாக புடம் போட்டுக் காட்டிய முஸ்லிம்குரல் பத்திரிகை மீண்டும் எமக்கான குரலாய் ஒலிக்க வேண்டும்.

விடுதலை புலிகளினால் எமது குரல்வளை நெசுக்கப்பபட்டபோது முஸ்லிம்களின் செய்திகள் வெளிவராதபோது அதனை உடனுக்குடன் எந்தவித வருமானமும் இல்லாத நேரத்திலும் சுமைகளை தனது தோழில் சுமந்து நாட்டின் நாலா பக்கமும் முஸ்லிம் குரல் எனும் பத்திரிகையை விநியோகம் செய்து வெற்றிகண்டவர் எம். பெளசர் அவர் விட்டுச் சென்ற வெற்றிட்டம் இன்னும் நிரப்பப்படவில்லை.

இன்றைய தமிழ்பேசும் மக்களின் ஊடகம் என்ற பெயரில் முஸ்லிம் உம்மத்தின் குரல்வளை நெசுக்கும் ஊடகங்களுக்கு ஒரு சாட்டையடியாக சகோதரர் எம். பெளசர் அவர்கள் முன் வரவேண்டும்

சுமார் 3 வருடங்கள் அவரோடு பணியாற்றி அவரிடம் நிறைய கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனது தொழிலும் எனது எதிர்காலத்திலும் ஆர்வம் காட்டும் எனது சாச்சா ஓட்டமாவடி அறபாத் மூலம் அறிமுகமானது.

பெளசர் நாநாவுடன் கடமையாற்றி காலத்திலே சமூகத்தின் மீதான பார்வையும் ஏதாவது ஒரு கலைத்துறையில் பயணிக்க வேண்டும் என்ற ஆர்வமும் மேலோங்கியது அதன் காரணமாகவே அன்றைய நாட்களில் சம்பளத்தை எதிர்பாராமல் அவருடன் பயணிக்க முடிந்தது.

அவருடன் கடமையாற்றிய காலத்திலே அவரது முழுநேர சமூகசேவையை எண்ணிப்பார்க்கின்ற போது இப்போதும் ஆச்சர்யமாகவே இருக்கிறது. சமூகத்தை காட்டி வயிறு வளர்க்கும் கபோதிகளுக்கு அவர் எடுத்துக்காட்டு. சுமார் 10 பேர் வேலை பார்க்கின்ற அலுவலகத்தில் வேலை முடிந்து வீடு சேர்வதற்கா அவர் வெளியாகும் போது இருக்கின்ற பணத்தை அடுத்த நாள் உணவுக்காக எங்களுக்கு தந்துவிட்டு வெறும் 20 ரூபாய் பணத்துடன் வீடு போன நாட்களும் அதிகமுண்டு. பலபேர் அவருடன் வெவ்வேறு விதமாக காய் நகர்த்தினாலும் ஒரு உண்மையான பத்திரிகையாளனாய் எங்களுடன் பல தியாகங்களுடன் சமூகத்துடன் பயணித்திருக்கிறார். அவரிடம் கற்றுக்கொண்ட சமூக உணர்வு விதைதான் இன்று என்னால் முடிந்த பணிகளை செய்ய வித்திட்டிருக்கிறது எனலாம்.

பல இன்னல்களுக்கு மத்தியில் பயணித்த பத்திரிகை பயணம் பொருளாதாரயின்மையால் 2005ம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது. இன்றைய நமது உம்மத்தின் உரிமைக்குரலாய் முஸ்லிம் குரல் ஒலிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here