மாணவர்கள் G.C.E O/L பரீட்சையில் 9ஏ பெறும் வகையில் கல்வியை மேன்படுத்த அமீர்அலி பவுண்டேசன் பங்களிப்பு செய்யும்

0
282

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கோட்டத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்கான வேலைத் திட்டத்தில் 9ஏ செயற்றிட்ட தொனிப்பொருளிலான அங்குரார்பண நிகழ்வு செவ்வாய்கிழமை மாலை பிரதியமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்றது.

இந்நி;கழ்வில் கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.றகுமான், அமீர் அலி பவுண்டேசன் அமைப்பின் பிரதி தவிசாளர் வைத்தியர் எஸ்.ஏ.ஏ.அல்தாப் அலி மற்றும் ஓட்டமாவடி கோட்ட பாடசாலை அதிபர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் காலங்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் மாணவர்கள் 9ஏ பெறுவதில் ஏற்படும் சவால்களை முறியடிக்கும் முகமாக அமீர் அலி பவுண்டேசன் அனுசரனையில் இவ்வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திலுள்ள பதினொன்று பாடசாலைகளில் இருந்து சாதாரண பரீட்சையின் தோற்றும் மாணவர்களின் கல்வி மட்டத்தை உயர்த்தும் வகையிலும், கல்விக் கோட்டத்தை முதன்மை பெற செய்யும் வகையிலும் இவ்வேலைத் திட்டம் அமையப்பெறவுள்ளது.

அந்த வகையில் மாணவர்களின் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் 9ஏ பெறும் வகையில் கல்வியை மேன்படுத்த அமீர்அலி பவுண்டேசன் தொடர்ந்து பங்களிப்பு செய்யும் என பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

அத்தோடு பிரதியமைச்சரின் இல்லத்தில் கல்விச் சமூகத்தினருடன் இணைந்து இப்தார் நிகழ்வும் இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here