“அலி பேனாட்” இன் மரணத்தூது (இறுதி காணொளி: தமிழ் உரை)

0
855

(தமிழில் கண்ணீருடன்: முஹம்மது ஸஃப்ஷாத், மொரட்டுவை பல்கலைக்கழகம்)

நீங்கள் எல்லோரும் அறிந்து கொண்டது போல அல்ஹம்துலில்லாஹ் நான் மரணித்துவிட்டேன்.

நான் ஒரு சிறிய வீடியோவை தயாரித்து விட்டுச் செல்ல விரும்புகிறேன், முதல் நாளில் இருந்து எனக்கு பக்கபலமாக இருந்த, முதல் நாளில் இருந்து என் இந்த பயணத்தில் தொடர்ந்து வரக்கூடிய எல்லா நண்பர்களுக்காகவும். தோழர்களே உங்களுக்கு அல்லாஹ் நற்கூலி தருவானாக!

இன்ஷாஅல்லாஹ் எனக்கும் ஆயுவுறு நிதியத்திற்கும் உங்கள் பங்களிப்புகளை தந்துதவுங்கள்!

சகோதர சகோதரிகளே! முதலில் ஒரு சிறிய அறிவுரை, அல்ஹம்துலில்லாஹ் எமது வாழ்வில் எம்மிடம் கார் இருந்தது, பணம் இருந்தது, தேவையான எல்லாமும் இருந்தது.

சுப்ஹானல்லாஹ் ஆனால் நான் நோயுற்றிருந்த போது எனக்கு ஏராளமான மக்கள் குறுஞ்செய்திகளை அனுப்பிவைத்தார்கள்.

சகோதரரே! நீங்கள் சுவனத்தை உறுதிப்படுத்திவிட்டீர்கள்!

சகோதரரே நீங்கள்…

சகோதரரே நீங்கள் இந்த சமூகத்திற்காக உம்மத்திற்காக நிறையவே செய்துவிட்டீர்கள் (என்றெல்லாம் அனுப்பிவைத்தார்கள்)

ஆனால் சுப்ஹானல்லாஹ் இது அந்தளவுக்கு பெறுமதியானதல்ல அல்லாஹ்வின் ஒரு சிறிய அருட்கொடை தான். காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்த நீங்கள் நீங்களாக குளியலறைக்கு நடந்து செல்வதற்கு இயலுமாக உள்ளதைப்போன்றது தான்.

எனவே இவையெல்லாம் மெதுமெதுவாக பறிக்கப்பட்டுவிடும். உங்களை விட்டும் பறிக்கப்பட்டுவிடும்

அல்ஹம்துலில்லாஹ் எனது வாழ்வில் இறுதித் தருணத்தில் உள்ளேன்!

அல்லாஹ்வின் மீதாணையாக சிலருக்கு தங்களுக்கு மரணம் எப்போது வரப்போகிறது என்பதை அல்லாஹ்விடம் இருந்து அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைப்பதில்லை. எம்மில் சிலரும் பலரும் எதிர்பாராமல் தீடீரென்று மரணித்து விடுகிறார்கள்.

நீங்கள் நிறைய சம்பவங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் எமது சகோதர சகோதரிகளின் மரணம் க்ளப்களிலும் போதையில் மூழ்கிய நிலையிலும் அது போல வேறு நிலைகளிலும் வருவதுண்டு. சுப்ஹானல்லாஹ்

எனவே, சகோதர சகோதரிகளே உங்கள் வாழ்வில் ஒரு இலக்கை கொண்டிருக்க முயற்சி செய்யுங்கள்; அதற்கான திட்டத்தை கொண்டிருக்க முயற்சி செய்யுங்கள்; அதை நடைமுறைப்படுத்தும் செயல்திட்டத்தை கொண்டிருக்க முயற்சி செய்யுங்கள்.

உங்களால் தனியாக செய்ய முடியாவிட்டாலும்

ஏனையோரால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களுக்காவது பங்களிப்பு செய்யுங்கள். எதையாவது செய்து கொள்ளுங்கள் ஏனென்றால் அல்லாஹ்வின் மீதாணையாக அது உங்களுக்கு இறுதி தீர்ப்பு நாளன்று அது அதிகம் தேவைப்படும்.

உலக வாழ்க்கையை அடைந்துகொள்வதற்காக துரத்தியடிக்கக்கூடிய சகோதர சகோதரிகளே! உங்களுக்கு என் அறிவுரை:

இந்த வாழ்க்கை அற்பமானது. முன்னெல்லாம் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை, பத்து வருடத்திற்கு ஒரு முறை நடந்த விடயங்கள் எல்லாம் இப்போது சாதாரணமாக ஒவ்வொரு மாதமும் நடந்துகொண்டிருக்கின்றன.

அல்லாஹ்வின் மீதாணையாக இப்போதெல்லாம் நாம் இஸ்லாத்தை பின்பற்றுவதை விடவும் அதிகமாக எமது ஆசைகளையே பின்பற்றுகிறோம்.

நாம் கவனமாக இருக்க வேண்டும் ஏனென்றால் குழந்தைகள் தாக்கப்படுகிறார்கள்; எம்மில் பலரும் தாக்கப்படுகிறார்கள், அல்லாஹ்வின் மீதாணையாக இது வெறும் நகைப்புக்குரிய விடயம் ஒன்றல்ல.

அல்லாஹ்வின் மீதாணையாக நான் முன்பெல்லாம் என் கட்டிலில் இருந்து கொண்டு அழுததுண்டு. எனக்கு மக்களின் துணை தேவைப்பட்டது. சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் உங்களையெல்லாம் எனக்காக கொண்டு வந்து சேர்த்தான். நீங்கள் நினைத்தும் பார்த்திருக்கமாட்டீர்கள் அவர்கள் உங்கள் வாழ்வில் அங்கமாக போவதை, நண்பர்கள் ஆகப்போவதை. அவர்கள் இருந்தார்கள் என்பதே உங்களுக்கு தெரியாது.

நான் பிரயாணப்பட்ட போது சில மக்களை சந்தித்தேன். அவர்களில் பெரும்பாலானோர் நான் நோய்வாய்ப்பட்டிருந்த போது துபாயிலிருந்தும் ருமு விலிருந்தும் என்னை சந்திப்பதற்காக அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடிய நேசத்தின் காரணமாக வைத்தியசாலைக்கு வந்தார்கள்.

போட்டோக்களை எடுக்கவோ வேறெதற்காகவோ அல்ல நான் நலமாக இருக்கின்றேனா என பார்த்து செல்வதற்காக மட்டுமே பதினான்கு மணி நேர விமான பிரயாணம் மேற்கொண்டு வந்தார்கள். சுப்ஹானல்லாஹ்.

நோய்வாய்ப்பட்டும் கவலைக்குள்ளாகி அழுத்தத்துடன் வாழக்கூடிய மக்களே! உங்களுக்கு நான் ஒன்றைக் கூறிக்கொள்கிறேன். கவலை கொள்ளாதீர்கள். நீங்கள் எதிர்பாராத நபர்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்காக அனுப்பி வைப்பான். உங்களுக்கு உண்மையிலேயே சிலரின் அரவணைப்பு தேவையானால், நம்பிக்கை கொள்ளுங்கள் அல்லாஹ்வின் மீதே தவக்குல் வைத்து பாரம் சாட்டுங்கள்.

எல்லோருக்குமாக சிறிய அறிவுரை செய்கிறேன்: இன்ஷாஅல்லாஹ் உங்களால் ஒருவருக்கோ இருவருக்கோ மூலவருக்கோ ஒரு நலவைச் செய்வதில் ஊக்குவிக்க முடியுமாக இருந்தால் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்! இன்ஷா அல்லாஹ் நீங்கள் மண்ணறைகளில் உள்ளபோதும் அவர்கள் செய்யும் அனைத்திற்காகவும் நன்மை பெறுவீர்கள்; அவர்கள் இஸ்லாத்திற்காக கொண்டு சேர்க்கும் அனைத்திற்காகவும் நீங்களும் நன்மை பெறுவீர்கள்.

மேலும் இன்ஷாஅல்லாஹ் அது உங்களுக்கு மறுமையில் மிகவும் பயனளிக்கும்.

எனவே, இன்ஷாஅல்லாஹ் உங்கள் வாழ்வில் நீங்கள் செயல்படுத்துவதற்காக ஒரு திட்டத்தையோ செயற்றிட்டத்தையோ கொண்டிருக்க முயற்சி செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ் அது உங்களுக்கு இந்த வாழ்வில் அதை நடைமுறைப்படுத்த உதவி செய்யும். இன்ஷா அல்லாஹ் அது எமக்கு மண்ணறையிலும் மறுமையிலும் பயனளிக்கும்.

ஜஷாகல்லாஹு ஹைரன்

வ அலைக்குமுஸ்ஸலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here