போதை பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வது போல அதனை விற்பனை செய்வோரும் அதிகமாக காணப்படுகின்றனர்.

0
504

(எம்.ரீ.எம்.பாரிஸ்)

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சமுக செயற்பாட்டாளரும் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினருமான ஏ.எம்.நெளபர் அவர்கள் விடுக்கும் செய்தி

இன்று மே 31 சர்வதேச போதை ஒழிப்பு தினமாகும். அரசாங்கம் எமது நாட்டில் இளம் சமுதாயத்தினரையும் மக்களையும் போதை வஸ்து பாவனையில் இருத்து பாதுகாக்க பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. நாட்டில் போதை வஸ்துபாவனையினால் வருடமொன்றிற்கு 20,000 பேரளவிலான இலங்கையர் மரணமடைகின்றனா் இது மிகவும் கவலைக்குறிய விடயமாகும்.

இதற்கமைவாக எமது பிரதேசத்தில் அதிதீவிரமாக பாடசாலை மாணவர்கள் முதல் இளைஞர்கள் மத்தியிலும் ”போதை பழக்கம்” அதனை நாகரீகத்தின் உச்ச கட்டமாக கருதி அதற்கு அடிமைப்பட்டு வருவதை எம்மால் அவதானிக்க முடிகிறது.

எமது பிரதேசத்தில் அதற்கான விஷேட செயற்றிட்டம் மற்றும் உயர் கொள்கைகள் வகுக்கப்பட்ட வேண்டிய அவசியம் அதிகம் காணப்படுகிறது. அதற்கான திட்டங்களை ஓட்டமாவடி பிரதேச சபை அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நான் முன்வைக்க இருக்கன்றேன். விரைவில் அதன் வினைதிறன் மிக்க செயற்பாடுகள் அமுலில் வரும் என்பதை பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

போதை பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வது போல அதனை விற்பனை செய்வோரும் அதிகமாக காணப்படுகின்றனர்.

இவ்வாறான சமுக சட்ட விரோதமான சொயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக பொலீசார் அதிதீவிர சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். இது விடயத்தில் பொது மக்கள் விழிப்புடன் செயற்படுவதுடன் நேர்மையாக பணியாற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கும் அதிகாரிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மக்களை அன்பாய் வேண்டிக்கொள்கின்றேன்.

இந்தருனத்தில் ஓட்டமாவடி பிரதேச சமுர்த்தி அபிவிருத்தி பிரிவு எட்டு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் சிறுவர் கழகங்களை நிறுவி உள்ளதுடன் போதை வஸ்து பாவனைக்கு எதிராக மக்களை விழிப்புட்டும் பணிகளை இன்று எமது பிரதேசத்தில் முன்னெடுத்துள்ளது .அதற்காக வேண்டி அக்கழங்களுக்கும் அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். பிரதேச சபை உறுப்பினர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here