JDIK நடாத்திய மாணவிகளுக்கான இஸ்லாமிய செயலமர்வு.

0
248

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் புனித ரமழான மாதத்தினை பயனுள்ளதாக மாணவச் சமுகம் அடைந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கில் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவிகளுக்கு நடாத்தப்பட்ட ஒருவார கால இஸ்லாமிய செயலமர்வின் இறுதிநாள் நிகழ்வு நேற்று பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

ஜம்இய்யாவின் கல்விப் பிரிவின் இணைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எல். இப்ராகிம் மதனி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அதிதிகளாக ஜம்இய்யாவின் உறுப்பினர்கள், உலமாக்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

அத்தோடு இச் செயலமர்வின் இறுதிநாள் அன்று நடைபெற்ற பரீட்சையில் சிறந்த புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட மாணவிகளுக்கு பணப்பரிசும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here