ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் நடைபெற்ற JDIK யின் இஸ்லாமிய கருத்தரங்கு.

0
106

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் புனித ரமழான் மாதத்தை மாணவ சமூகம் பயனுள்ளதாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஒருவார கால இஸ்லாமிய செயலமர்வை ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் நடாத்தி வந்தது. அந்தவகையில் செயலமர்வின் இறுதியில் நடாத்தப்பட்ட பரீட்சையில் சிறந்த புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு பணப்பரிசு மற்றும் சான்றிதழ்களும் அத்தோடு இப்தாருக்கான பொதிகள் போன்றவை வழங்கும் இன்று (01) நடைபெற்றது.

ஜம்இய்யாவின் கல்விப் பிரிவுக்கான இணைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எல்.எம். இப்றாகிம் மதனி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் பொருளாளர் ஜே.எம்.இம்தியாஸ், தாருஸ்ஸலாம் கல்லூரியின் விரிவுரையாளர்களான ஏ.எல்.சனூஸ் மஸ்ஊதி, எஸ்.எம்.இர்ஷாத் ஸலபி மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பணப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here