ஓட்டமாவடி சிறுவர் கழங்களினால் போதை பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புட்டும் நடவடிக்கை ஆரம்பம்

0
672

(எம்.ரீ.எம்.பாரிஸ்)

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு “புகைத்தல் மற்றும் போதையை ஒழித்து சிறுவர்களை காப்போம்” எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் புகைத்தல் எதிர்ப்பு தினம் நேற்று சிறுவர் கழகங்களினால் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது சிறுவர்களினால் தமது பெற்றோர்கள் மற்றும் பொது மக்களை விழிப்புட்டும் பேரணிகள் செயலமர்வுகளும் இடம் பெற்றன.

சமூர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின் கீழ் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவின் எட்டு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் சிறுவர் கழகங்கள் நிறுவப்பட்டுள்ளது. இதற்கமைவாக சிறுவர் கழகங்களின்னூடாக சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுத்தல், போதை பொருள் பாவனைக்கு எதிராக மக்களை விழிப்புட்டல் என பல்வேறு நிகழ்வுகள் இப்பிரதேசத்தில் இடம் பெற்று வருகின்றது.

இதன் உத்தியோக பூர்வ நிகழ்வு ஓட்டமாவடி, காவத்தமுனை, பதுரியா மாஞ்சோலை கிராமத்தில் சமூர்த்தி தலைமை முகாமையாளர் எம்.எல்.ஏ மஜீட் தலைமையில்;; ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத், உதவிப்பிரதேச செயலாளர் அப்கர் மற்றும் செயலக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டார்.

அன்மைகாலமாக இப்பிரதேசத்தில் போதை மாத்திரைகள் மற்றும் விற்பனையாளர்களின் எண்னிக்கை அதிகரித்து காணப்படுகின்றது. இது இப்பிரதேசத்தில் பாரிய அச்சுறுத்தலாக அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here